Header Ads



இலங்கையின் மிக நீளமான தந்தம்கொண்ட யானைக்கு, வரலாற்றில் நடந்த அதிர்ச்சிகர சம்பவம்

தற்­போது இலங்­கை­யி­லுள்ள என்ற ஆண் யானையின் பிறப்­பு­றுப்பின் ஒரு­ப­கு­தியை முத­லை­யொன்று கடித்துத் துண்­டாக்­கி­யதன் கார­ண­மாக குறித்த யானையின் உடல்­நிலை கவ­லைக்­கி­ட­மாக காணப்­ப­டு­வ­தாக வன­ஜீ­வ­ரா­சிகள் அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

அர்­ஜுன' என்ற இந்த யானை நேற்­று ­-05- முன்­தினம் பிற்­பகல் யால தேசிய பூங்­காவில் சித்­துல்­பவ்­வ­வுக்கு அண்­மையில் குள­மொன்­றினுள் இறங்­கிய வேளையில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

யானையின் பிறப்­பு­றுப்பை முத­லை­யொன்று கடித்­தமை இலங்கை வர­லாற்­றி­லேயே இதுவே முதற் தட­வை­யென சிரேஷ்ட வன­ஜீ­வ­ரா­சிகள் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்­துள்ளார். 

கடி­யுண்­ட­தை­ய­டுத்து இந்த யானை பிறப்­பு­றுப்பில் இரத்தம் வழிந்­த­வாறே வேத­னையில் வனப்­ப­குதி முழு­வதும் தலை­தெ­றிக்க ஓடிக்­கொண்­டி­ருந்­த­தாக அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

ஊவா வன­ஜீ­வ­ரா­சிகள் வல­யத்­துக்கு பொறுப்­பான சிரேஷ்ட மிருக வைத்­தியர் ஆனந்த தர்ம கீர்த்தி தலை­மை­யி­லான இரு குழு­வினர் யானையை பிடித்து அதனை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்து சிகிச்சையளிப்பதற்காக நேற்றைய தினம் அனுப்பப்பட்டதாக வனஜீவராசிகள் திணைக்களத்தின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.