Header Ads



மியான்மருடன் நாங்கள் என சூகியிடம் கூறிய மோடி, ரோஹின்யா குறித்து மவுனம்

மியான்மரில் பவுத்தர்களால் ஒரு மில்லியன் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் என்று பார்க்கப்படுகிறது. 

ராகினேவில் இஸ்லாமியர்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டு வருகிறது. மியான்மரில் ஜனநாயக ஆட்சிக்காக போராடிய சூ கி ஆட்சிக்குவந்த பின்னரும் அவர்கள் மீதான தாக்குதலில் மாற்றம் ஏற்படவில்லை, மோசம்தான் ஏற்பட்டு உள்ளது. இஸ்லாமியர்கள் மீது நடைபெறும் இனப்படுகொலைக்கு உலக நாடுகள் முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மியான்மரில் ரோஹிங்யா இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக ‘தி அராக்கன் ரோஹிங்யா சால்வேசன் ஆர்மி’ என்ற பெயரில் ஒரு போராளி குழு இயங்கி வருகிறது. ரோஹிங்யா இஸ்லாமியர்கள் பல்வேறு வன்கொடுமைகளை அப்பகுதியில் எதிர்க்கொண்டு வருகின்றன. வன்முறை முன்னெடுக்கும் பகுதியானது சர்வதேச ஊடகங்கள் பிரவேசிக்கமுடியாத பகுதியாகவே உள்ளது. இதனால் வெளிப்படையாக தகவல்கள் வெளியாவது என்பது கேள்விக்குரியது. இதற்கிடையே சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மியான்மரில் ராகினேவில் உள்ள பாதுகாப்பு படையின் மையங்கள் மீது போராளி குழுவானது தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாக கூறி பயங்கர தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. மியான்மர் ராணுவம் இஸ்லாமியர்கள் இருந்த கிராமங்களை தீ வைத்து எரித்து உள்ளது. இதுதொடர்பான சேட்டிலைட் புகைப்படங்களை மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்து உள்ளது. வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். லட்சக்கணக்கானோர் அகதிகளாக வங்கதேசம் நோக்கி நகர்ந்து வருகின்றனர். 

இச்சம்பவங்களால் மியான்மரில் சூ கி அரசு சர்வதேச விமர்சனத்திற்கும், கண்டத்திற்கும் உள்ளாகி உள்ளது. இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி மியான்மர் நாட்டிற்கு பயணம் செய்தது முக்கியமானதாக பார்க்கப்பட்டது. மியான்மரில் பிரதமர் மோடி, சூ கியை சந்தித்து பேசினார். பிரதமர் மோடி ராகினேவில் நடைபெறும் பயங்கரவாத வன்முறை மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு எதிரான வன்முறைக்கு கவலையை வெளிப்படுத்தி உள்ளார். ஆனால் ரோஹிங்யா இஸ்லாமியர்கள் துன்புறுத்தல் தொடர்பாக பேசுவதை தவிர்த்துவிட்டார். 

ரோஹிங்யா இஸ்லாமியர் விவகாரத்தில் சூ கி உலக நாடுகளின் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளநிலையில் பிரதமர் மோடி அவருக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார். 

நே ப்யி தாவில் சூ கியுடன் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, “ராகினே மாநிலத்தில் நடைபெறும் பயங்கரவாத வன்முறை, பாதுகாப்பு படைகளுக்கு எதிரான வன்முறை மற்றும் அப்பாவி உயிர்கள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளன என்பதில் மியான்மர் கவலையுடன் இந்தியாவும் உள்ளது, மியான்மரின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட்டு அனைத்துதரப்பும் ஒன்றாக இணைந்து வழியை கண்டுபிடிக்கமுடியும் என நாங்கள் நம்புகிறோம். அனைவருக்குமான அமைதி, நீதி, கண்ணியம் மற்றும் ஜனநாயக மதிப்பை பெறமுடியும் என்றார். 

மியான்மர் பயங்கரவாத எச்சரிக்கையை எதிர்க்கொண்டு உள்ளதில் ஸ்திரமான நிலைப்பாட்டை எடுத்த இந்தியாவிற்கு நன்றி என்றார் சூ கி.

அவர்கள் பேசுகையில் இந்தியா மற்றும் மியான்மர், தங்களுடைய மண்ணில் பயங்கரவாதம் கால்பதிப்பதை அனுமதிக்காது என்பதை கூட்டாக உறுதிசெய்ய முடியும் எனவும் சூ கி கூறிஉள்ளார். 

No comments

Powered by Blogger.