Header Ads



ஜும்மா பற்றிய, மாற்றுமத சகோதரரின் கசப்பான அனுபவம்

-எம்.எஸ். முஹம்மது இக்ரிமா- 

அவர், எனக்கு நன்கு அறிமுகமான ஒரு மனிதர்; சகோதர இனத்தைச் சேர்ந்த, இஸ்லாத்தை தொடர்ந்து கற்றுக்கொண்டிருக்கும், அதன் மீது நல்லபிப்பிராயம் கொண்டுள்ள ஒரு மனிதர்; அவரது சில பிள்ளைகள்கூட இஸ்லாத்தைத் தழுவியுள்ளார்கள்; அவர் ஒர் ஓய்வு பெற்ற முன்னால் மாகாண சபை பிரதம செயலர் (chief secretary) உம்கூட ! அவர் எனது நன்பர் ஒருவரிடம் கேட்டிருந்தார், "........ உங்கட பள்ளிகள்ள வெள்ளிக்கிழமையில செய்யிற சொற்பொழிவுகள கேற்கிற நான்.  அதென்னடப்பா உங்கட பள்ளியில உள்ள மௌலவியள் பேசுறனெண்டு போர் பிரகடணம் செய்யும் பாணியில் பேசுறாங்கள் ? தீவிரமின்றி , ஆக்ரோஷமின்றி,  என்ன பக்குவவமா , அமைதியா  சேர்ச்சில 'பாதரிகள்' உபதேசம் செய்றாங்க ! 

அவரது இந்த அவதானத்தைக் கேட்டவுடன் நான் மிகவும் கவலையடைந்தேன். அவர் கூறியதில் எவ்வளவு உண்மைகள் உள்ளன. இந்த அவதானம் என்னிடம் ஏற்கனவே இருந்தது. ஆனாலும் எமது சமூகம் இக்கருத்தை ஜீரணிக்குமா என்ற அச்சம் இருந்தது.ஆனாலும் அதைப் பற்றி எழுதவேண்டுமெனும் ஆர்வம், அந்த மாற்று மத சகோதரருடைய அவதானக்குறிப்பினால்தான் ஏற்பட்டது.  உண்மையில் அனேகமான பள்ளிகளில் நடைபெறும் வெள்ளிக் கிழமை கொத்பாக்களை உற்றுநோக்கும் அந்நிய இனத்தவர் ஒருவர் என்ன முடிவுக்கு வருவார் என எண்ணிப்பாருங்கள். ஆகா.... பள்ளி கொத்பாக்கள்தான் தீவிரவாதத்தின் அச்சாணி; இங்கிருந்துதான் தீவிரவாத்த்தை நோக்கி தூண்டிவிடப்படுகிறார்கள் எனும் மனப்பதிவு ஏற்படுத்தப்பட நிறைய வாய்ப்புகள் உள்ளன. சில மார்க்க உபதேசங்களை கேற்கும் போது அதன் பொருள் புரியாத மாற்று மொழி சகோதரர் ஒருவர் அதனை வெறுமனே காதுகளால் கேட்டதுமே வெறுப்பான ஒரு மனோ நிலைக்கே  தள்ளப்படுவார். 

அனேகமான சொற்பொழிவாளர்கள் 'சொற்பொழிவு' என்பதன் அர்த்தத்தை புரியாதுள்ளனர். அதன் கலை, முறைமை, தொகுப்பு பற்றிய பயிற்சியில்லாமலுள்ளனர். அவர்களுக்கு, வாக்கு வேட்டை அரசியல் மேடைப்பேச்சுகளுக்கும், மார்க்க உபன்னியாசங்களுக்கும் வேறுபாட்டை உணர முடியவில்லை. உண்மையில் 'சொல் + பொழிவு' என்பதன் பொருளை சரியாக சொல்வதானால் ஒரு பேச்சில் சொற்கள் மழை பொழிவது போல தொடராகவும் துளித்துளியாகவும் நேர்த்தியாகவும் அமைய வேண்டும். அப்போதுதான் 'பொழிவு' எனும் விகுதி  அர்த்தப்படும். ஆனால் எமது அனேகமான   பகிரங்க மார்க்க உபதேசங்கள் ( public religious talk) கூட  

1. தேவைக்கதிகமான சத்தத்துடன் வெறிகோண்ட ஆக்ரோஷம் நிறைந்த்தாக அமைகின்றன. 2. சிலவேளை மாற்றுக் கருத்துடையவர்களை வன் சொல் கொண்டு தாறுமாறாக தாக்குதல்; மிகப் பெரிய அறிஞர்களைக்கூட 'அவன்' , 'அடே' ,மொட்டையான பெயர் கொண்டு .... குறித்துப்பேசுதலாக அமைகிறது. இதனை சலபி , இக்வான் மோதலில் காண முடிகிறது.  3. சில வெள்ளிக்கிழமை கொத்துபாக்களில் கூட ஒரு குறித்த தனி நபரை பெயர்கூறி தாக்குவதையும் தரக்குறைவாக விமர்சிப்பதையும் காண முடிகிறது. இதனை தெளிவாக தௌஹீத் ஜமாத்தின் உற்பிரிவுகளுக்கிடையில் காண முடிகிறது.  4. சொற்பொழிவுகளில், குத்தல் , கிண்டல் , கேலி , வன் சொல் வார்த்தைகளை தாராளமாக கேற்க முடிகிறது.  5. தேவையான திருத்தப்பட வேண்டிய சமகால ஊரின் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது தேவைக்குதவாத பழைய புராணங்கள், தெருச் சண்டைகள், வீண் சர்ச்சைகள் என்பன மிம்பர் மேடைகளை அதிரவைக்கின்றன.  6. சில உலமாக்கள் அடித்தொண்டையினால் கத்தி முன்னாலுள்ளவர்களை எச்சிலால் நனைய வைப்பதுதான் சிறந்த சொற்பொழிவு என நினைக்கிறார்கள்.  7. இஸ்லாம் என்பது சாந்தி, அமைதி ... எனும் பொருள்கொண்டது. அவ்வாறிருக்க பயங்கரமான, ஆவேசமான தொணியில் அபரிமிதமான அபினயங்களுடன் கைகளை அங்கு வீசி, இங்கு வீசி அமைதியின் மேடையை அமர்களமான அரசியல் மேடையாக ஆக்கிக் கொள்ளப்படுகிறது . அனேகமாக வெள்ளிக் கிழமைகளில்  நாடாங்கடைக்குள் எருமை நுழைந்த (bull in a China shop) உணர்வே எமக்கு பள்ளிகளில் கிடைக்கிறது. 

இவ்வாறாக எமது மார்க்க சொற்பொழிவுகள், நாம் எங்கு, எதைப் , யாரைநோக்கி, எந்த சூழலில் பேசுகிறோம் என்ற எந்த வேறுபாட்டுணர்வுமின்றி வார்த்தைகளை அள்ளி வீசுவதுதான் சொற்பொழிவு என நாம் எண்ணியிருக்கிறோம். இந்த நிலைமை நாம் சிறுபாண்மையாக வாழும் பல்லின சூழல் கொண்ட இந்த நாட்டில் மீள்பரிசீலனை செய்யப்படவேண்டும். குறிப்பாக தற்போதைய எமது நாட்டின் பாதக சூழலில் ஒன்றுக்குப் பல தடவை எமது பகிரங்க சொற்பொழிவுகள் சீரமைக்கப்படவேண்டும்.  பேச்சு ஒன்றின் தொகுப்பு, அதன் தயார் படுத்தல், சொல்லாட்சி, சமர்பிப்பு என்பன ஒரு கலையாகவே வளர்ந்துவிட்ட நவீன உலகில் எமது உலமாக்கள் இதுபற்றிய எந்த பிரக்ஞையுமில்லாமல் மதுரசாக்களிலிருந்து சமூகத்தினுள் வெளியீடு செய்யப்படுவது எமது துரதிஸ்டமே ! மாற்று மத்த்தவர்களை மாத்திரமல்ல இன்னும் சில காலத்தில் எமது சமூகத்தவரே கொத்பாக்களை தீவிர வாத அறைகூவலாக பார்த்து வெறுப்படையும் நிலை உருவாகலாம். 

மேலும் இலங்கையில் ப்ரைவட் பஸ்களிற்கு அடுத்ததாக ஒளி மாசடைவுக்கு உதாரணங்களைக் கேட்டால் நான் இலங்கையில் வணக்கஸ்தளங்களையே காட்டுவேன். அந்தளவிற்கு கோயில், பள்ளிகள், பன்சலைகள் தேவையற்ற விதத்தில் ஒலி பெருக்கிகளை பயன்படுத்துகிறார்கள். சில பள்ளிகளில் கொத்பாக்களை சகிக்க முடியாதளவுக்கு சௌண்ட் உயர்த்தப்படுகிறது. எனதூரில் ஒரு பள்ளியிலே ஒரு தூனிற்கு நான்கு பொக்ஸுகள் வீதம் பொருத்தப்பட்டிருந்ததை காணமுடிந்தது. உபதேசம் காதுகளால் உனரப்பட்டால் போதுமாக இருக்கும்போது காதுகளைக் குடையுமளவுக்கு பள்ளி பொக்சின் சத்தத்தை உயர்த்துவதிலுள்ள இன்பம்தான் என்னவென்று இதுவரை என்னால் புரிந்துகொள்ள முடியாதுள்ளது.  நாம் விரைவாக செயற்பட்டு இந்நிலையை மாற்றவேண்டிய தேவையுள்ளது. இல்லையெனில் எம்மை நோக்கி மாற்று மத சகோதரர்கள் அனுகுவதை இது முற்றாக இல்லாததாக்கிவிடும். எனவே இதற்காக பின்வரும் விடயங்களை நோக்கி எமது கவனத்தைக் குவித்தல் சிறப்பாக அமையும்.

1. பொதுப் பேச்சின் கலை பற்றிய குருங்கால கற்கைநெறிகளை உலமாக்களுக்கு வழங்குதல்.  2. ஒலி மாசடைவு , அதன் தாக்கம் மனித செவிப்புலனின் தாங்கு திறன் பற்றிய விளிப்பை பள்ளி நிருவாகத்தினருக்கும் உலமாக்களுக்கும் ஏற்படுத்தல்.  3. பள்ளி பரிபாலனம் (Administration of mosques) என்பதை ஒரு கற்கை நெறியாக மதுரசாக்களில் அறிமுகம் செய்து மேலே ஆராயப்பட்ட மூன்று விடயங்களையும் நிவர்த்திக்க முயல்தல்.  4. எமது சமூக நிறுவனங்கள், உலமா சபை என்பன, முஸ்லிம் கலாசார அமைச்சு என்பன மேற்போத்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முயல்தல்.  5. பானசாலை இஸ்லாம் பாட புத்தகங்களூடாக இவ்விடங்கள் பற்றிய கருத்துருவாக்கத்தை மேற்கொள்ளல் 

எமது ஆக்ரோஷமான மிம்பர் மேடைப் பேச்சுகளை செவியுறும் மாற்று இனத்தவர்கள் வெள்ளிக்கிழமை கொத்பாக்கள்தான் தீவிவாதத்தை தூண்டுகிறது என்று எண்ணுமளவுக்கு நாம் தொடர்ந்து நடந்துகொள்வது எமக்கு ஆபத்தாக அமையலாம். அல்லது அந்த உரிமைகள் சிலவற்றை இழக்கும் நிலை உருவாகலாம். எனவே இதுபற்றிய விவாதங்களை ஆரம்பித்துவைக்கலாமெனும் நோக்குடன் இதனை வரைகிறேன். 

10 comments:

  1. இது உண்மையான விடயம்.அதிக உலமாக்கள் தொண்டை கிழிய கத்துகிறார்கள்.ஆக்ரோசத்துடன் முழங்குகிறார்கள்.அது ஒரு மௌலவிமார்கலின் நடையாக போய்விட்டது.கொஞ்சம் அமைதியாக தெளிவாக பயான் செய்தால் போதுமானது.

    ReplyDelete
  2. it is not merely to Islam alone ..
    Look some other clerics too do this ..
    Islam speak to human minds and human emotion too.
    Qur'an speaks to human minds and human feeling too ..
    how many times it speaks to your hearts as it does to your brains ..
    but our alims too need to know arts of talks..
    but do not blankly blame them.

    ReplyDelete
  3. ஜும்மாவை நல்ல நோக்கம் கொண்டு பார்க்க வேண்டும் சகோதரர்.. நபிகளாரும் போர் பிரகடனம் செய்வது போன்றே பிரசங்கம் செய்வார்கள்.. தேவையற்ற கட்டுரைகளை போடுவதை தவிர்க்க பல முறை யாழ் முஸ்லிம் க்கு பலர் வேண்டுகோள் விடுத்தும் கவணம் செலுத்துவதில்லை.. வார்த்தைகள் கடுமையாக இருக்கும் ஆனால் தவறான வார்த்தைகளை பாதிப்பதில்லை.. கட்டுரையாளர் ஜும்மா போவதில்லை போலும்..

    ReplyDelete
  4. We have to give training to these Ulamaas through the ACJU. WE HOPE THAT ACJU WILL DO A PERFECT JOB.

    ReplyDelete
  5. Masha Allah, good suggestion. I too agreed what you said.

    ReplyDelete
  6. Sathiyatha urathu sollanum, moodikkittu solrathukku izu ondum church kidaiyaazu

    ReplyDelete
  7. அகில இலங்கை ரீதியாக உலமாக்களுக்கான பேச்சு பயிட்சிகளை வழங்கி அதிலிருந்து தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு மாத்திரமே ஜும்மா பிரசங்கத்திட்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் .

    ReplyDelete
  8. Very good article. Our Moulavis should be trained on making Friday speeches. There is no harm if they make it loud where necessary but the whole speech should not be a noisy one. I think Friday speeches should be completed within a duration of 20-25 minutes. Attacking specific individuals should be avoided in public. Learning only Quran and Arabic language is not sufficient for Moulavis.

    ReplyDelete
  9. ஒரு விஷயத்தில் இரண்டு விதமாக மக்களுக்கு எத்திவைக்கலாம் ஒன்று சுவர்க்கம் பற்றிய விடயங்களைக் கூறி அடுத்து நரகத்தை ஏச்சரிக்கை செய்து இரண்டுமே இஸ்லாம் அங்கீகரிக்கப்பட்டது எவனோ சொண்ணத

    ReplyDelete

Powered by Blogger.