September 24, 2017

ஹசீனாவை படுகொலை செய்யும், சதிதிட்டம் முறியடிப்பு

வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல பயங்கரவாதிகள் சதிதிட்டம் தீட்டியது தெரியவந்து உள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு சிறப்பு பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். 

அவர்களில் 6 முதல் 7 பேர் மூலம் டாக்காவில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சுட்டுக்கொல்ல சதிதிட்டம் தீட்டப்பட்டு உள்ளது. 

அலுவலக பணியில் மூழ்கியிருக்கும் அவரது கவனத்தையும் விசுவாசமான பாதுகாப்பு படையினரின் கவனத்தையும் திசை திருப்பி கொலை செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர்களின் கொலை சதி முறியடிக்கப்பட்டது. இச்சம்பவம் கடந்தமாதம் (ஆகஸ்டு) 24-ந்தேதி நடந்தது. இச்சதியை ஜமாத்-உல்-முஜாகிதீன் வங்காளதேசம் என்ற அமைப்பின் மூலம் செயல்படுத்த திட்டமிடப்பட்டு இருந்து உள்ளது. இந்த சதிதிட்டத்தை இந்தியா மற்றும் வங்காளதேச உளவுப்பிரிவு கடைசிநேரத்தில் முறியடித்து உள்ளது. பயங்கரவாதிகள் மற்றும் ஹசீனாவிற்கு பாதுகாப்பு அளிக்கும் வீரர்கள் இடையிலான டெலிபோன் உரையாடல் மூலம் கண்டு பிடித்து தடுத்து நிறுத்தினர்.

தற்போது இச்சதியில் ஈடுபட்டவர்கள் கண்டுபிடித்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதற்காக சந்தேகப்படும் நபர்கள் அனைவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசீனா கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரியில் பதவி ஏற்றார். அங்கு மக்களாட்சியை முடிவுக்கு கொண்டுவந்து இஸ்லாமிய அரசை நிறுவ போராடும் இயக்கங்களால் அவரை கொல்ல 11 தடவை சதி நடந்துள்ளது. அவை அனைத்தும் முறியடிக்கப்பட்டது.

பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கூட்டாக இப்போது சதிதிட்டம் தீட்டப்பட்டு இருந்து உள்ளது. ஹசீனாவின் அலுவலகத்தை சுற்றிய பகுதியில் வெடிகுண்டுகளை வெடிக்க செய்யவும், அவருக்கு பாதுகாப்பு அளிப்பவர்கள் அவரை சுட்டுக் கொல்லவும் திட்டம் தீட்டப்பட்டு இருந்து உள்ளது. வெடிகுண்டுகளை வெடிக்க செய்வதன் மூலம் ஹசீனாவை சுட்டுக் கொல்லும் பாதுகாப்பு படையினர் எளிதாக பயங்கரவாத தாக்குதல் என தப்பிவிட முடியும் என்ன நோக்கில் திட்டம் தீட்டப்பட்டு இருந்து உள்ளது என தெரியவந்து உள்ளது.

வங்காளதேசத்தில் செயல்பட்டு வரும் ஜமாத் உல் முஜாகிதீன் இயக்கம் அங்கு பல்வேறு தாக்குதல்களை முன்னெடுத்து உள்ளது. சதிசெயல் முறியடிப்பு மிகவும் எச்சரிக்கையாக முறியடிக்கப்பட்டு உள்ளது, இதில் தொடர்புடைய கடைசி நபர் வரையில் விசாரணை வளையத்திற்குள் வருவார்கள், இதில் சந்தேகத்திற்குரிய அனைத்து நபர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது என வங்காளதேச உயர் அதிகாரிகள் கூறிஉள்ளனர்.

3 கருத்துரைகள்:

"ஜப்னா முஸ்லிம்" சரியான பாதையை நோக்கி போவதாக தெரியவில்லை. பஞ்சத்தில் இருப்பவள் கண்டவர்கலுடனெல்லாம் படுக்கையை பகிர்வது போல் உள்ளன, உங்கள் சேதிகள். தரம் பிரித்தறியாமல் முஸ்லிம் விரோத அல்லது நயவஞ்சக ஊடகங்களை உங்கள் சேதிகளுக்குரிய source ஆக எடுப்பதையும் அல்லது அந்த தளங்களில் வரும் சேதிகளை cut & paste பண்ணுவதையும் நிறுத்திவிடுங்கள். உங்களை நம்பி வரும் உங்கள் வாசகர்களை பிழையாக வழிநடாதுவதன் மூலம் உங்கள் மீதும் எமது சந்தேகத்தினை வலுப்படுத்தாதீர்கள். ஊடக விபச்சாரிகளாக மாறி விடுவீர்களோ என்ற பயம் எமக்கு உள்ளது. சேதிகளை அணுகும் முறையில் மாற்றம் வேண்டும். நீங்களும் முஸ்லிம் விரோத மேற்கு மற்றும் இந்திய ஊடகங்களின் பாணியில் சேதிகளை பிரசுரிப்பது என்றால் மாற்று ஊடகம் என்ற வட்டத்திற்குள் இருந்து தயவு செய்து வெளியே வந்து விடுங்கள். ஆழ்ந்த வாசிப்புடன் கூடிய தொடர்தேச்சியான அவதானம் ஊடாகத்தான் சேதிகளின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். அது தவிர தமக்குள்ள வேலைகளில் பத்தோடு பதினொன்றாக ஊடகப்பணியை நீங்கள் கருதிவீர்கலானால் நீங்கள் எமது முகத்தினை சரியாக காட்டிடாத கண்ணாடியாக மாறுவீர்கள். அல்லாஹ் உங்களது முயற்சியில் தூய்மையும் அர்பணிப்பையும் ஏற்படுத்துவானாக.

The news maybe true. there are several groups trying to bring islamic rule in bangladesh!.

I also totally agree with the above. Whatever the news, may be filtered and purified before it's publication. If so we can trust your media.

Post a Comment