Header Ads



ரோஹின்ய மீதான இனப்படுகொலைக்கு "ஒருகாரணம்" இலங்கை முஸ்லிம்களுக்கும் படிப்பினை உண்டு

மியன்மார், ரோஹிங்­கியா முஸ்­லிம்­களின் இனச் சுத்­தி­க­ரிப்பு படு­கொ­லையின் பின்­ன­ணியில் எண்ணெய், எரி­வாயு வளங்கள் உள்ளமை தெரி­ய­வந்­துள்­ளது. இதில் முஸ்­லிம்கள் படிப்­பினை பெறு­வ­துடன், பாதிக்­கப்­பட்ட ரோஹிங்­கியா முஸ்­லிம்­க­ளுக்­காக அதிகம் பிரார்த்­திக்க வேண்டும் என்று அட்­டா­ளைச்­சேனை ஜூம் ஆப் பெரிய பள்­ளி­வா­யலில் உரை­யாற்­றிய  அர­சியல் ஆய்­வாளர் ரஊப் ஷெய்ன் தெரி­வித்தார்.

மியன்மார், ரோஹிங்­கியா முஸ்­லிம்­களின் இனச் சுத்­தி­க­ரிப்பு படு­கொலை தொடர்பில் பொது­மக்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்கும் நிகழ்வு அட்­டா­ளைச்­சேனை ஜூம்ஆப் பெரிய பள்­ளி­வா­யலில் நடை­பெற்­றது. அதன் போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

'ரோஹிங்­கியா முஸ்­லிம்கள், நெருக்­க­டிக்­கான பின்­ன­ணியும், அர­சியல் எதிர்­கா­லமும்' என்ற தலைப்பில் உரை­யாற்­றிய ஆய்­வாளர் ரஊப் ஷெய்ன் மேலும் கூறு­கையில்,

சுமார் 05 கோடி மக்கள் தொகை கொண்ட மியன்மார் நாட்டில் 48 இலட்சம் முஸ்­லிம்கள் வாழ்­கின்­றனர். முஸ்­லிம்­களில் பாண்டா, மசூஸ், ரோஹிங்­கியா ஆகிய முன்று பிரி­வினர் உள்­ளனர். இவர்­களில் ரோஹிங்­கியா பிரிவு முஸ்­லிம்­களே இனச்­சுத்­தி­க­ரிப்பு, படு­கொ­லைக்­குள்­ளாக்­கப்­ப­டு­கின்­றனர். இதன் பின்­ன­ணியில் எண்ணெய், எரி­வாயு வளங்கள் உள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. 

1970ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட ரோஹிங்­கியா முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான அட்­டூ­ழி­யங்கள் 2012 ஜூன் 10 ஆம் திகதி மேலும் உக்­கி­ர­ம­டைந்­தன. அதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 25 முதல் அவர்­க­ளுக்­கெ­தி­ரான அரா­ஜ­கங்கள் பகி­ரங்­க­மாக கட்­ட­விழ்த்து விடப்­பட்­டுள்­ளன. 

ரோஹிங்­கியா முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான மியன்மார் நாட்டு அரசின் அட்­ட­கா­சங்கள், அரா­ஜ­கங்கள், அச்­சு­றுத்­தல்கள், துன்­பு­றுத்­­தல்கள் சொல்­லுந்­த­ர­மன்று. சிறு­வர்கள், பெரி­ய­வர்கள், பெண்கள், இளை­ஞர்கள் என நூற்­றுக்­க­ணக்­கான முஸ்­லிம்கள், ஆயுத­தா­ரி­களால் சுட்டுக் கொல்­லப்­பட்­டுள்­ளனர். ஏற்­க­னவே உள்ள 3 இலட்சம் முஸ்லிம் அக­தி­க­ளுடன், மேலும் 03 இலட்­சத்து 17 ஆயிரம் பேர் இணைந்து கொண்­டுள்­ளனர்.

பாது­காப்­பில்லை, உண­வில்லை, குடி­நீ­ரில்லை, வாக­ன­மில்லை, கையில் எது­வு­மின்றி மக்கள் 08 நாட்கள் கால்­ந­டை­யாக நடந்து பங்­க­ளாதேஷ் எல்­லையை வந்­த­டை­கின்­றனர். இம்­மக்கள் எதிர் கொள்ளும் துன்ப துய­ரங்கள் இன்று சமூக வலைத் தளங்­களில் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான நிலை­மைக்கு யார் காரணம் என்­பது குறித்து நாங்கள் அதிகம் சிந்­திக்க வேண்டும்.

மியன்மார் நாட்டில் வாழும் ரோஹிங்­கியா முஸ்­லிம்கள் மியன்மார் நாட்டு அர­சினால் ஆரம்பம் முதலே ஓரங்­கட்­டப்­பட்டு வரு­கின்­றனர். அவர்கள் கல்வி கற்க முடி­யாது, பொரு­ளா­தார ரீதியில் முன்­னேற முடி­யாது, கல் வீடு­களை கட்ட முடி­யாது, விரும்­பிய இடத்தில் வாழ முடி­யாது, பாட­சாலை, மத்­ர­ஸாக்­களை நிர்­மா­ணிக்க முடி­யாது. குறைந்­தது திரு­மணம் செய்­வ­தென்றால் கூட அர­சிடம் முன்­ன­னு­மதி பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் இரண்டு குழந்­தை­க­ளுக்கு மேல் பெற்றுக் கொள்­ளவும் முடி­யாது.

ரோஹிங்­கியா முஸ்­லிம்­க­ளுக்கு தேசிய அடை­யாள அட்டை இல்லை. அவர்கள் நல்ல உயர்­தரத் தொழில்­களில் ஈடு­ப­டவும் முடி­யாது சிறிய சுத்­தி­க­ரிப்பு, கல் உடைக்கும் தொழில்­களைச் செய்­வ­தற்கே அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர். மாத்­தி­ர­மன்றி ஒதுக்குப் புற­மான பிர­தே­சத்தில், மண் குடி­சை­க­ளி­லேயே அவர்கள் வாழ்ந்து வருகின்றனர், பாரி­ய­ள­வி­லான தொழில்­க­ளிலும் அவர்கள் ஈடு­பட முடி­யாது. 

ரோஹிங்­கி­யா முஸ்லிம்களின் தற்­போ­தைய நிலை மிகவும் கவ­லைக்­கி­ட­மாக உள்­ளது. வயோ­தி­பர்­களை தங்­க­ளுடன் அழைத்துச் செல்ல முடி­யாது வீடு­களில் தங்க வைக்­கப்­ப­டு­கின்­றனர். அவ்­வாறு தங்க வைக்­கப்­பட்­ட­வர்கள் வீட்­டு­டனே தீயிட்டு எரிக்­கப்­ப­டு­கின்­றனர். தின­சரி கொல்­லப்­ப­டு­ப­வர்­களின் ஜனா­ஸாக்­க­ளை­யேனும் முறை­யாக அடக்கம் செய்­வ­தற்கு நாதி­யற்­ற­வர்­க­ள­ாக, மக்கள் துன்ப, துய­ரங்­க­ளோடு உயிரை கையில் பிடித்துக் கொண்டு தின­சரி நாட்களைக் கடத்தி வருகின்றனர். 

ரோஹிங்கியா முஸ்லிம்கள் வாழும் ரெக்கியாங் மாநிலத்தில் எண்ணெய், எரிவாயு வளங்கள் உள்ளமை கடந்த 2012 ஆம் ஆண்டு நிரூபணமாகியுள்ளது. இவ்வாறு மக்களுக்கு நெருக்குதல்களை தொடர்ந்து கொடுத்து, அவர்களை துரத்தி வளங்களை கைவசப்படுத்திக் கொள்வதே வல்லரசுகளின் சதித்திட்டமாக உள்ளது. இச்சதியில் இலங்கை முஸ்லிம்களான நாங்கள் அதிகம் படிப்பினைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.