Header Ads



ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு உதவி, வழங்கக்கூடாது என புத்த மதத்தினர் போராட்டம்


மியான்மரில் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா இனத்தவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்கு தீ வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 4 லட்சத்துக்கும் 
அதிகமானோர் அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அந்த வகையில் செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்கள் ஒரு படகில் நிவாரண பொருட்களுடன் ராக்கின் மாகாணத்தின் தலைநகர் சிட்வே வந்தனர். அப்போது அங்கு புத்த மதத்தினர் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு, ரோஹிங்யா 
முஸ்லிம்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கக்கூடாது என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைகளில் இரும்பு கம்பி, கட்டை உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் நிவாரண பொருட்கள் கொண்டு வந்த படகின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் மோதல் வெடித்தது.

இதையடுத்து, போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். மோதலில் ஈடுபட்ட சிலரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.