Header Ads



நவம்பர் மாதம் 9 இல் வரவுசெலவு திட்டம் சமர்ப்பிப்பு - அரசசெலவு 3,982 பில்லியன், அரசவருவாய் 2,175 பில்லியன்

2018 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்ட உறை 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 09 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் இரண்டாம் வாசிப்பு தொடர்பான பாராளுமன்ற விவாதம் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 10,11,13,14 மற்றும் 15 ஆம் திகதிகளில் நடாத்துவதற்கும், அதன் குழுநிலை விவாதத்தினை 2017-11- 16 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கும், மூன்றாம் வாசிப்பின் வாக்கெடுப்பினை 2017-12- 09 ஆம் திகதி நடாத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

2018 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத இறுதியில் பாராளுமன்றத்தில் மேசைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான அரச முழு செலவு – 3,982 பில்லியன் ரூபா

 2018 ஆம் ஆண்டுக்கான அரச வருவாய் - 2,175 பில்லியன் ரூபா இவ்வாறு தயாரிக்கப்பட்ட வரவு செலவு திட்ட முன்மொழிவுகள் அடங்கிய 2018 ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் பின்னர் அனுமதியினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

1 comment:

  1. 1807 பில்லியன் துண்டு விலும் தொகை இதை எங்கிருந்து எடுப்பார்கள் மக்களின் தலையில் அடுத்த வருடமும் அரசாங்கம் பாரத்தை கட்ட ஆரம்பிக்கின்றது.

    ReplyDelete

Powered by Blogger.