Header Ads



600 மில்லியன் அரசநிதி மோசடி, தண்டனை பெற்றவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

600 மில்லியன் ‌ரூபா அரச நிதியினை மோசடி செய்த குற்றச்சாட்டில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவருக்கும்  கொழும்பு மேல் நீதிமன்றம், தலா மூன்று வருட சிறைத்தண்டனையும் தலா 2 பில்லியன் ‌ரூபாய் தண்டப்பணமும் விதித்து நேற்று (07)தீர்ப்பளித்தது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில், சமய அனுட்டானத்துக்கான ‘சில்’ ஆடைகளை வழங்குவதற்காக, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிலிருந்து 600 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்தனர் என்ற குற்றச்சாட்டில், சட்டமா அதிபரினால், மேற்குறித்த இருவருக்கு எதிராகவும் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. அது என்ன அரசியல் வாதிகள் யாவரும் கைது செய்யப்பட்டால் அடுத்த கணம் உடனே ஆஸ்பத்திரிக்கு செல்வதுதான்.... பேதி உண்டாகுதோ.... ????

    ReplyDelete

Powered by Blogger.