September 10, 2017

முஸ்­லிம்­களின் 60 ஏக்கர் காணியை, கபளீகரம் செய்ய சதி - கண்வைத்தார் அதிகாரி

-SNM.Suhail-

வடக்கே புல்­மோட்டை முதல் தெற்கே வெருகல், மேற்கே அநு­ரா­த­புரம் மாவட்டம், கிழக்கே இந்து சமுத்­தி­ரத்­தையும் எல்­லை­யாக கொண்ட திரு­கோ­ண­மலை மாவட்டம் 2529 சதுர கி.மீ. நிலப் பரப்பை கொண்­டது. 152,854 பேர் அதா­வது, 40.42 வீத முஸ்­லிம்­களை கொண்ட இம்­மா­வட்­டத்தில்  முஸ்லிம்கள் மிகக் குறைந்த பரப்பு காணி­யி­லேயே வசிக்­கின்­றனர்.  ஆனால் அங்கு முஸ்­லிம்கள் வாழும் பகு­தியை மையப்­ப­டுத்தி ஆயி­ரத்­தெட்டு காணிப்­பி­ரச்­சி­னைகள் திட்­ட­மிட்டு தோற்­று­விக்­கப்­ப­டு­கின்­றன.

புல்­மோட்டை, நீனாக்­கேணி, குச்­ச­வெளி, தோப்பூர், சம்பூர், கரு­ம­லை­யூற்று உள்­ளிட்ட பகு­தி­களில் இது தொடர் பிரச்­சி­னை­யா­கவே இருக்­கின்­றது. குறிப்­பாக இப்­பி­ர­தே­சங்­களில், காணி உரித்து பெறு­வதில் சிக்கல், வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­களம், தொல்­பொருள் திணைக்­களம், இரா­ணுவ முகாம்கள், தளங்கள், கரை­யோர பாது­காப்பு திணைக்­களம், அபி­வி­ருத்தித் திட்­டங்கள் உள்­ளிட்ட பல வடி­வங்­களில் காணிப்­பி­ரச்­சி­னைகள் தொற்­று­நோயாய் பர­வி­யி­ருந்­தது. 

இந்த தொடரில் இன்று நிலா­வெ­ளியும் இணைந்­தி­ருக்­கி­றது. அங்கு புதி­தாக சுற்­றுலாத்துறை தொடர்­பான பிரச்­சி­னை­யாக இருக்­கலாம் என சந்­தே­கிக்க தோன்­று­கின்­றது. அத்­தோடு சில அர­சியல் சக்­திகள் சுற்­றுலா விடு­தி­களை அமைக்க இந்தக் காணியை கப­ளீ­கரம் செய்ய முயற்­சிப்­ப­தாக குற்­றச்­சாட்­டு­களும் எழுந்­தி­ருக்­கின்­றன. 

நிலா­வெளி பிர­தே­சத்தில் உள்ள ரஸூல் தோட்டம் என்­கிற பகு­தியில் 60 ஏக்கர் நிலம் மீது அதி­கா­ரத்திலுள்ள ஒருவர் கண் வைத்­து­விட்­ட­தா­கவும் அதனை அப­க­ரிக்க பல்­வேறு வகை­யிலும் மக்­க­ளுக்குத் தொந்­த­ரவு கொடுப்­ப­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

குறித்த ரஸூல் தோட்டம் காணி நிலா­வெளி சுற்­றுலா பகு­தி­யான கடற்­க­ரைக்கு அண்­மித்­த­தாக காணப்­ப­டு­கின்­றது. அங்கு சுற்­றுலா பிர­யா­ணி­களை குறி­வைத்து பாரிய விடு­திகள் அமைக்க முடியும். இத­னா­லேயே இதனை கப­ளீ­கரம் செய்யத் திட்­ட­மி­டு­கின்­றனர் என பிர­தே­ச­வா­சிகள் குற்றம் சுமத்­து­கின்­றனர். 

கடந்த மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் இப்­ப­கு­தியில் காணி அள­வீடு செய்­வ­தற்­காக அதி­கா­ரிகள் வந்­த­போது மக்கள் கடு­மை­யாக எதிர்ப்பு தெரி­வித்­த­தை­ய­டுத்து அந்த முயற்சி கைவி­டப்­பட்­டுள்­ளது. இதற்கு பின்னர் சில சந்­தர்ப்­பங்­களில் இக்­கா­ணியை அள­விட அதி­கா­ரிகள் முயற்­சித்­துள்­ளனர். இதன் தொட­ராக நேற்­று­முன்­தினம் புதன்கிழமை ரஸூல் தோட்டக் காணியை அத்­து­மீறி அள­வீடு செய்ய அதி­கா­ரிகள் எத்­த­னித்­த­போது பொது­மக்­க­ளுக்கும் பொலி­ஸா­ருக்­கு­மி­டையே முறுகல் நிலை ஏற்­பட்­டது.  இச்­சம்­ப­வத்­தை­ய­டுத்து பிர­தே­சத்தில் பதற்­ற­நிலை தோன்­றி­யது.

கடந்த முப்­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக வசித்து வரும் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மான அறு­பது ஏக்கர் காணியை அள­வீடு  செய்­வ­தற்கு மாகாண காணித் திணைக்­கள அதி­கா­ரிகள் மற்றும் குச்­ச­வெளி பிர­தேச செய­லக  அதி­கா­ரிகள் உள்­ளிட்­டோரும் ஸ்தலத்­திற்கு வருகை தந்­தனர். இதன்­போது மக்கள் கடு­மை­யான எதிர்ப்பை வெளி­யிட்­ட­தோடு பொலி­ஸா­ருக்கும் பொது மக்­க­ளுக்­கு­மி­டையே வாய்த் தர்க்கம் ஏற்­பட்­டது. 

இந்­நி­லையில் மக்கள் அங்கு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். இதன்­போது கலகம் அடக்கும்  பொலிஸார் வர­வ­ழைக்­கப்­பட்டு எதிர்ப்பு ஆர்ப்­பாட்டம் நடாத்­தி­ய­வர்கள் விரட்­டி­ய­டிக்­கப்­பட்­டனர். இதன் பின்னர் பொலிஸ் பாது­காப்­போடு காணி அள­வீடு செய்­யப்­பட்­டது. 
அடை­யா­ள­மி­டப்­பட்ட எல்­லைக்குள் பிர­தேச செய­லா­ள­ரினால் காணி அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இப்பகுதியில் பல குடி­ம­னை­களும் விடு­தி­களும்  சிறு  தோட்ட பயிர்­களும் காணப்­ப­டு­கின்­றன.

நிலா­வெளி ரஸூல் தோட்ட காணியில் சுமார் 30 வரு­டங்­க­ளுக்கு மேலாக தோட்­டங்­களும் மற்றும் குடி­யி­ருந்து வந்த காணி­யினை 1980 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியில் சுற்­று­லாத்­துறை சபை­யினால் ஆக்­கி­ர­மிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் கடந்த பல வரு­ட­கா­ல­மாக வசித்து வரு­வ­தோடு அங்கு வாழ்­வா­தா­ரத்­திற்­காக சிறு­தோட்டம் மற்றும் விவ­சாய நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்டு வரு­கின்­றனர். 

 குறித்த பகு­திக்கு மாகாண சபை உறுப்­பினர் அன்வர் விஜயம் மேற்­கொண்டு பொலி­ஸா­ருடன் பேசி மக்­களை சம­ர­சப்­ப­டுத்­தினார். அத்­தோடு, இது விட­ய­மாக மாவட்ட பிரதி பொலிஸ் மா அதி­ப­ருடன் தொலை­பே­சியில் தொடர்­பு­கொண்டு உரை­யா­டினார்.

இத­னி­டையே, குறித்த காணி­யினை அள­விட்டு நிரந்­த­ர­மாக வசித்த மற்றும் தோட்டம் செய்த மக்­களை தாம் எந்த விதத்­திலும் எழுப்­ப­வில்லை. அவர்­களின் நிரந்­தர வீடுகள் மற்றும் கட்­ட­டங்கள் காணப்­படும் இடங்கள் தொடர்­பாக தாம் உரிய அதி­கா­ரி­க­ளுக்கு அறிக்­கைகள் சமர்­ப்பித்­துள்ளோம். தாம், மக்கள் குறித்த பகு­தியில் வசிப்­பதை உறு­திப்­ப­டுத்­தி­ய­தா­கவும்  குச்­ச­வெளி பிர­தேச செய­லாளர் தெரி­வித்தார். அத்­தோடு இது விட­ய­மாக மாவட்ட பொலிஸ் மா அதிபர், பாரா­ளு­மன்ற (Oversight Committee) கூட்­டத்தின் முடி­வையும் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தா­கவும் தெரி­வித்தார்.

இது தொடர்­பாக விளக்கம் அளித்த நிலையில் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் ஒத்­து­ழைப்­போடு பாரா­ளு­மன்­றக் (Oversight Committee) கூட்­டத்தில் மீளவும் அறிக்­கைகள் சமர்ப்­பிக்­கப்­பட்டு தீர்ப்­ப­தற்கு ஆவண செய்­யப்­ப­டும் என மாகாண சபை உறுப்­பினர் அன்வர் மற்றும் அதி­கா­ரி­களால் விளக்கம் அளிக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து மக்கள் அமை­தி­யாக சென்­றனர்.

அடுத்த வாரம்  பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இம்ரான் மஹ்ரூப் தலை­மையில் நிலா­வெ­ளியில் காணிப் பிரச்­சினை தொடர்­பாக கூட்­ட­மொன்றை நடத்த பிர­தேச வாசிகள் ஏற்­பாடு செய்­துள்­ளனர்.

இப்­ப­கு­தி­யி­லுள்ள முஸ்­லிம்­களின் காணிப் பிரச்­சினை குறித்து ஆரா­யப்­பட வேண்டும், அத்­தோடு பிர­தி­ய­மைச்சர் சுசந்த புஞ்­சி­நி­லமே இவ்­வி­வ­கா­ரத்தின் பின்னால் இருப்­ப­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்காகவே இவ்வாறு அதிகாரிகளையும் பொலிஸ் பலத்தையும் பயன்படுத்தி அக்காணியை சுவீகரித்துக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

அரசியல்வாதிகள் தமது சுயநலத்திற்காக மக்களை அச்சுறுத்துவதற்கும் அரசியல் அதிகாரத்தையும் பொலிஸ் பலத்தையும் பயன்படுத்துவதை தடுக்க வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களை தடுக்கமுடியும். இதற்கு முஸ்லிம் தலைமைகள் ஒற்றுமையாகத் தீர்வைப் பெற்றுக்கொடுக்க திட்டமிட்டு காய் நகர்த்தலை மேற்கொள்ள வேண்டியது இன்றைய தேவையாகும்.

0 கருத்துரைகள்:

Post a Comment