Header Ads



ஜம்­இய்­யதுல் உலமா அனுப்பிய 5 முக்கிய கடிதங்கள் - துருக்கிக்கு உணர்ச்சிகர நன்றியும் தெரிவிப்பு

மியன்­மாரின் ராக்கைன் மாநி­லத்தில் வாழும் ரோஹிங்யா முஸ்­லிம்கள் மீது அந்­நாட்டு அர­சாங்­கத்­தினால் நிகழ்த்­தப்­படும் வன்­மு­றை­களை நிறுத்­து­மாறு அழுத்தம் வழங்கக் கோரியும் ரோஹிங்யா மக்­களைப் பாது­காக்­கு­மாறு வலி­யு­றுத்­தியும் அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உலமா சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளுக்கு நேற்­று முன்தினம் கடி­தங்­களை அனுப்பி வைத்­துள்­ளது.

கொழும்­பி­லுள்ள மியன்மார் தூத­ரகம், ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம், ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர், ஓ.ஐ.சி. எனப்­படும் இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­புக்­கான அமையம், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகி­யோ­ருக்கு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின்  தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி, பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் முபாரக் ஆகி­யோ­ரினால் ஒப்­ப­மிட்டு  இக் கடி­தங்கள் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளன.

இதே­வேளை, ரோஹிங்யா மக்கள் விட­யத்தில் உரிய கரி­ச­னையைச் செலுத்தி வரும் துருக்­கிய அதிபர் அர்­து­கா­னுக்கு பாராட்டு தெரி­விக்கும் கடிதம் ஒன்றும் உலமா சபை­யினால் கொழும்­பி­லுள்ள துருக்கி தூத­ரத்தின் ஊடாக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

மியன்மார் தூத­ர­கத்­திற்கு 

கொழும்­பி­லுள்ள மியன்மார் தூத­ர­கத்­திற்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில், ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மியன்­மாரில் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் மனி­தா­பி­மா­ன­மற்­றதும் கொடூரம் வாய்ந்­த­ததும் அநீ­தி­யா­ன­து­மான நட­வ­டிக்­கை­களை நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறோம்.  இந்த இனச்­சுத்­தி­க­ரிப்பை உட­ன­டி­யாக முடி­வுக்குக் கொண்டு வரு­மாறும் ரோஹிங்யா மக்­க­ளுக்கு பாது­காப்­பையும் நிரந்­தர தீர்­வையும் வழங்­கு­மாறும் கோரிக்கை விடுக்­கிறோம் எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஐ.நா.வுக்கு 

இதே­வேளை, ரோஹிங்யா மக்­களைப் பாது­காத்து அவர்­க­ளது பிரச்­சி­னை­க­ளுக்கு நீதி­யையும் நிரந்­தரத் தீர்­வையும் பெற்றுக் கொடுக்க முன்­வ­ரு­மாறு ஐக்­கிய நாடுகள் சபையின் செய­லாளர் நாயகம் அன்­டா­னியோ குட்ரஸ் மற்றும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் ஸெய்த் ராஇத் ஹுசைன் ஆகி­யோ­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

ஓ.ஐ.சி.க்கு 

இதே­வேளை, ஓ.ஐ.சி. எனப்­படும் இஸ்­லா­மிய ஒத்­து­ழைப்­புக்­கான அமை­யத்தின் செய­லாளர் நாயகம் கலா­நிதி யூசுப் பின் அஹ்மத் அல் ஒதை­மீ­னுக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்தில், ரோஹிங்யா விவ­கா­ரத்தில் தலை­யிட்டு அம் மக்­க­ளுக்கு நிரந்­தர தீர்வைப் பெற்றுத் தர முன்­வ­ரு­மாறு கோரப்­பட்­டுள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரிக்கு 

அதே­போன்று, ரோஹிங்யா முஸ்­லிம்கள் விவ­காரம் தொடர்பில் மியன்மார் அர­சுக்கு அழுத்­தங்­களை பிர­யோ­கிக்க வலி­யு­றுத்தி அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மா­வினால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் கடிதம் ஒன்று அனுப்பி வைக்­கப்­பட்­டுள்­ளது.

இக் கடி­தத்தில், இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சின் சகல இரா­ஜ­தந்­திர வலை­ய­மைப்­புகள் மூல­மாக மியன்மார் அர­சாங்­கத்­திற்கு அழுத்­தங்­களை பிர­யோ­கிக்­கு­மாறு உத்­த­ர­வி­டு­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. 

இலங்­கையில் சக­வாழ்­வையும் நல்­லி­ணக்­கத்­தையும் கட்­டி­யெ­ழுப்­பு­வதில் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­படும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை தாம் பாராட்­டு­வ­தா­கவும் இதே முன்­மா­தி­ரியை ரோஹிங்யா மக்­களின் விட­யத்­திலும் பின்­பற்ற வேண்டும் என தாம் பிரார்த்­திப்­ப­தா­கவும் அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

துருக்­கிக்கு பாராட்டு 

இதே­வேளை,  ரோஹிங்யா விவ­கா­ரத்தில் கரி­ச­னை­யாக செயற்­ப­டு­வது தொடர்பில் துருக்கி அர­சாங்­கத்­திற்கு உலமா சபை பாராட்டுக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்­துள்­ளது.

கொழும்­பி­லுள்ள துருக்கி தூத­ர­கத்தின் ஊடாக அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள இப் பாராட்டுக் கடி­தத்தில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது, 

மியன்மார் நாட்டில் ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக மனி­தா­பி­மா­ன­மற்ற வகையில் இடம்­பெறும் வன்­செ­யல்கள், படு­கொ­லைகள், வன்­பு­ணர்­வுகள், இருப்­பி­டங்­க­ளுக்கு தீ வைத்தல் போன்ற கொடூ­ரங்கள் தொடர்பில் அகில இலங்கை ஜம்­மி­யத்துல் உலமா உன்­னிப்­பாக கவ­னித்து வரு­கின்­றது.

ரோஹிங்ய அப்­பாவி பொது­மக்கள் நிம்­ம­தி­யான ஒரு சூழலில்  பாது­காப்­பாக வாழவும், ரோஹிங்யா விவ­காரம் தொடர்பில் நிரந்­த­ர­மான தீர்­வுகள் பெற்றுக் கொள்­ளப்­ப­டவும் வேண்டி எல்லாம் வல்ல அல்­லாஹ்வின் உத­வியை நாடி  தனி­யா­கவும் கூட்­டா­கவும் பிரார்த்­திக்­கு­மாறு எமது மக்­களை நாம் வலி­யு­றுத்­தி­யுள்ளோம். இன்­னல்­களில் சிக்­குண்டு வாடி வதங்கும் எமது ரோஹிங்யா சகோ­தர, சகோ­த­ரி­க­ளுக்­காக இலங்கை நாட்டில் சிறு­பான்­மை­யாக வாழ்ந்து வரும் முஸ்லிம் சமூ­க­மா­கிய எம்மால் வருந்­தவும் அவர்­க­ளுக்­காக இறை­வ­னிடம் பிரார்த்­திக்­கவும் மாத்­தி­ரமே சாத்­தி­ய­மாகும். 

உங்கள் நாட்டு தலைவர் தையிப் அர்­துகான், ரோஹிங்யா முஸ்­லிம்கள் விட­யத்தில் ஆத­ர­வா­கவும் காத்­தி­ர­மா­கவும் செயற்­பட்டு, உலக அமை­தியை விரும்பும் அத்­தனை மக்­க­ளி­னதும் அபி­மா­னத்தை வென்­றுள்ளார் என்றால் மிகை­யா­கது. 

அரசியல் ரீதியாகவும் இன ரீதியாகவும் அடக்கி ஒடுக்கப்பட்டு வரும் ரோஹிங்யா மக்களின் சாபம் ஆங்சாங் சூகியையே சாரும். தான் பெற்ற சமாதானத்துக்கான நோபல் பரிசை திரும்பக் கையளிக்காதிருப்பது தொடர்பில் ஆங்சாங் சூகி வெட்கித் தலைகுனிய வேண்டும். 

ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் தங்கள் அனைவர் மீதும் அல்லாஹ் அருள் மழையை பொழிவானாக. இலங்கை வாழ் மக்களினது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

7 comments:

  1. May Allah Bless ACJU for this work. ALSO we should find ways to send our assistance to rohingya people . I hope ACJU can try to do this with the help of Turkey.

    Let us unit to help our bloods in Rohingya by all means and especially by making Dua

    ReplyDelete
  2. JAZAKALLAH HAIR.MAY ALLAH BLESS OUR ENTIRE HUMAN

    ReplyDelete
  3. Surprise.
    No one their to critizise ACJU. Lol

    ReplyDelete
  4. What is the impact this is going to make or the gravity to put hold their barbaric act...?? Nothing.
    JU want to showcase their existence and make cheap publicity....

    It would be better this so called u lama educate our Muslim community of this issue, necessay precautions we have to adopt, also instruct our ummah to fast and make prayers openly.
    The best would be call for whole muslim ummah & arrange a peaceful public protest against the genocide.

    ReplyDelete
    Replies
    1. What is the impact protest is going to do ? . 😀. Nothing. Last few decades we have seen so many protest. But no results. It's also some kind of publicity.

      Learn to encourage. Don't criticise.

      Delete
  5. MashaaAllah ACJU . Welldone .
    Erdogan of Turkey deserves all praise n appreciation of Umma for its brave stance n concern .

    ReplyDelete
  6. May Allah Bless Turkey . All praise belong only to Allah and not to be said for any other.

    ReplyDelete

Powered by Blogger.