Header Ads



மியான்மரிலிருந்து 4 லட்சம் முஸ்லிம்கள் ஏன், ஓடினார்கள் என தெரியவில்லை - ஆங்சான் சூகி


ரோஹிஞ்யா முஸ்லிம்கள் வசிக்கும் பெரும்பாலான கிராமங்கள் அமைதியாக இருப்பதாக ஆங் சான் சூகி தெரிவிப்பு

மியன்மாரில் ரோஹிஞ்யா முஸ்லிம்கள் வசிக்கும் பெரும்பாலான கிராமங்கள் வன்முறைகளின்றி அமைதியாக இருப்பதாக ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் சிறுபான்மையினராகவுள்ள ரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீது வன்முறைச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அங்குள்ள ராக்கைன் மாநிலத்தில் ரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களில் 100க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் பகுதிகளிலிருந்து வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்து வருகின்றனர்.

ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் மியன்மாரிலிருந்து வங்கதேசத்துக்கு குடிபெயர்ந்த ரோஹிஞ்யா முஸ்லிம்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தைத் தாண்டியுள்ளது என ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

மியன்மாரில் ரோஹிஞ்யா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைத் தடுக்காமல் இருந்ததற்காக ஆங் சான் சூகிக்கு எதிராக உலகம் முழுவதிலும் இருந்து கண்டனக்குரல்கள் பதிவாகின.

இந்த நிலையில், இது தொடர்பான விளக்கம் ஒன்றை தொலைக்காட்சி மூலம் அளித்துள்ளார் ஆங் சான் சூகி.

சில ரோஹிஞ்யா முஸ்லிம்களின் வெளியேற்றத்தை வைத்து உலக நாடுகள் விமர்சனங்களை முன்வைப்பதாகவும், மியன்மாரில் பெரும்பாலான ரோஹிஞ்யா முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் முன்பு இருந்தது போலவே வன்முறை இல்லாமல்தான் உள்ளதாகவும் அதில் அவர் கூறியுள்ளார்.

மியன்மாரில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை சமாளிக்க தனது அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சர்வதேச சமூகம் தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் ரோஹிஞ்யா முஸ்லிம்கள் வசிக்கும் கிராமங்களில் பாதிக்கும் மேற்பட்டவை வன்முறையால் பாதிக்கப்படவில்லை என்றும் வேண்டுமானால் அப்பகுதிகளுக்கு வெளிநாட்டுத் தூதர்கள் சென்று பார்வையிடலாம் என்றும் ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார்.

மேலும், ராக்கைன் மாநிலத்தில் நடந்த மனித உரிமை மீறல் செயல்களுக்கு சூகி தனது கண்டனத்தையும் வௌியிட்டுள்ளார்.

2 comments:

Powered by Blogger.