Header Ads



இலங்கையை வியப்பில் ஆழ்த்தியுள்ள பொலிஸ் சான்ஜன்ட் - 45 இலட்சத்தை திருப்பிக் கொடுத்தார்

இலங்கையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் செயற்பாடு வங்கி நிர்வாகத்தினரை வியக்க வைத்துள்ளது.

வங்கியொன்றில் கோரிக்கைக்கு அதிகமான பணத்தை வழங்கிய நிலையில், அந்தத் தொகையை மீண்டும் வங்கியிலேயே ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சிலாபம் வங்கி கிளையில் பணம் பெற்று கொள்வதற்கு சென்ற சந்தர்ப்பத்தில் தனக்கு சொந்தமல்லாத பணத்தொகை அவர் மீளவும் ஒப்படைத்துள்ளார்.

54 வயதுடைய சோமபால ரன்பிட்டிகேன என்ற பொலிஸ் அதிகாரியே இவ்வாறு நேர்மையாக செயற்பட்டுள்ளார். அவர் கந்தலாய் பகுதி பொலிஸ் பிரிவில் சான்ஜன்டாக பணியாற்றி வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து சோமபால ரன்பிட்டிகேன கருத்து வெளியிடுகையில்,

“எனது மகன் ஒருவர் ஜப்பானில் கல்வி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றார். அவரது கல்வி நடவடிக்கைகளுக்காக இடைக்கிடையே அவருக்கு பணம் அனுப்பி வைப்போம்.

மாரவில பிரதேசத்தில் அமைந்துள்ள வங்கி கிளையின் ஊடாகவே அவருக்கு பணத்தை அனுப்பி வைப்போம். அதற்கமைய இதே வங்கியின் சிலாபம் கிளைக்கு சென்று எனது வங்கி கணக்கில் இருந்து 505000 ரூபாய் பணத்தை மீளப்பெற்றேன்.

வங்கியில் வழங்கப்பட்ட பணத்தை நான் இதன்போது கணக்கிட்டு பார்க்காமல் மாரவில வங்கிக்கு கொண்டு சென்று அந்த பணத்தில் 5000 ரூபாய் மாத்திரம் கையில் எடுத்துக் கொண்டு மிகுதி பணத்தை மாரவில வங்கியில் வழங்கினேன்.

நான் வழங்கிய பணத்தை கணக்கிட்டதன் பின்னர், 50 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளது, 45 ஆயிரம் மாத்திரமே தேவை என கூறி வங்கி மீகுதி பணத்தை என்னிடமே வழங்கியது. தான் வங்கியில் 5 லட்சம் பணம் பெற்ற போதிலும், 45 லட்சம் பணத்தை வங்கி அதிகமாக வழங்கியுள்ள விடயம் எனக்கு தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் நான் மீண்டும் சிலாபம் வங்கிக்கு சென்று வங்கி முகாமையாளரை சந்தித்து நடந்தவற்றை தெரிவித்தேன். அதன் பின்னர் முகாமையாளர் எனக்கு பணம் வழங்கிய வரை அழைத்து வினவிய போது அவர் அச்சமடைந்தது விளங்கியது.

அதன் பின்னர் நான் அந்த பணத்தை மீளவும் வங்கியில் செலுத்தினேன். நான் மீளவும் செலுத்தியிருக்கவில்லை என்றால் எனக்கு பணம் வழங்கிய அதிகாரிக்கு செலுத்த நேரிட்டிருக்கும் என அந்த பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

  1. Are you sure About this news; I Can't believe this because completely impossible; logically this not possible.

    ReplyDelete

Powered by Blogger.