Header Ads



40.000 ரோஹின்யர்களை, மியன்மாருக்கு நாடுகடத்தப் போவதாக இந்தியா அறிவிப்பு

இந்தியாவில் வாழும் ரோஹிஞ்சா மக்களை நாடு கடத்த திட்டமிட்டுள்ளதாக இந்தியா அறிவித்திருப்பது, பிரதமர் நரேந்திர மோதி பெளத்தர்கள் பெரும்பான்மையாக வாழும் மியான்மரில் பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில், அந்நாட்டு மக்களை திருப்பதிப்படுத்தும் ஒரு முயற்சியாகும் என்று யாங்கூனிலுள்ள சுபிர் பௌமிக் தெரிவிக்கிறார்.

இந்தியாவில் வாழுகின்ற சுமார் 40 ஆயிரம் ரோஹிஞ்சா மக்கள் அனைவரையும், இந்தியா நாடுகடத்தும் என்று இந்திய உள்துறை அமைச்சர் கிரன் ரிஜ்ஜி அறிவித்திருக்கிறார்.

ஐக்கிய நாடுகள் அவையால் அகதிகளாக பதிவு செய்யப்பட்டுள்ள 16 ஆயிரம் ரோஹிஞ்சா மக்களும் இந்த 40 ஆயிரம் பேரில் உள்ளடங்குகின்றனர்.

"ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகள் நிறுவனத்தில் பதிவு செய்திருப்பதால் எந்த பயனும் இல்லை. எங்களை பொறுத்தமட்டில் அனைவரும் சட்டப்பூர்வமற்ற குடியேறிகளே" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி நடைபெற்ற காவல் நிலைகள் மீதான தாக்குதலுக்கு பிறகு, மியான்மரின் பயங்கரவாத தடுப்புக்கு எதிரான முயற்சிகளுக்கு உறுதியாக ஆதரவளிப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவித்திருக்கிறது. BBC

2 comments:

  1. Dear Mr.Modi,

    1. Stop the current genocide
    2.send the troops to involve in humanitarian activities for the displaced ppl
    3.Try to resettle the current dispaced ppl and rehabitate them
    4.Find the justice for the attrocities conducted by the government of Myanmar since last 7 decades
    5.Push the Myanmar govt to devolute the political rights and required power for the Rohingyans.
    6. setup a mechanism and check that Rohingyans are well enough to selfdefence and live dignity
    7. Find the leaders and arogants of Myanmar govt who involed in innocent killings by intrrnational investigation and punish the offenders.

    Then consider about sending the innocent Rohingyans from India.even If you are not able to do one of the above, justice will not be given to affected ppl.

    ReplyDelete
    Replies
    1. India has nothing to do with Myanmar and it's not India's business.

      Myanmar is currently under the influence of China.
      China is the one currently protecting it and ensuring that UN is not taking actions against it.

      Delete

Powered by Blogger.