Header Ads



3 வரு­டங்­க­ளாக சிறு­வனின் தலையில் துப்­பாக்கி ரவை

-JM-HAFEEZ-

மூன்று வரு­ட­மாக சிறுவன் ஒரு­வனின் தலைப் பகு­தியில் காணப்­பட்ட துப்­பாக்கி ரவை ஒன்றை பேரா­தனை வைத்­தியசாலை டாக்­டர்கள் மிக வெற்­றி­க­ர­மான சத்­தி­ர­சி­கிச்சை ஒன்றின் மூலம் அகற்­றி­யுள்­ளனர்.

இது குறித்து, வைத்­திய சாலையின் பணிப்­பாளர் டாக்டர் ஆர்.கே. ஹேரத் தெரி­விக்­கையில்,- 

விவ­சாயப் பயிர்­க­ளுக்கு சேதம்   ஏற்­ப­டுத்தும் குரங்­கு­களை விரட்­டு­வ­தற்­காகப் பயன் படுத்­தப்­படும் ஒரு­வகை ரைபிள் தொழிற்­பட்­டதால் அதி­லி­ருந்து பாய்ந்த ரவை மேற்­படி சிறு­வனின் தலையைத் தாக்­கி­யுள்­ளது. 

மேற்­படி சிறு­வனை கேகாலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்து ஆரம்பக் கட்ட சிகிச்­சை­களை வழங்கி பின்னர் பேரா­தனை ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்கா சிறுவர் வைத்­தி­ய­சா­லைக்கு அனுப்­பினர்.

அவ்­வைத்­தி­ய­சா­லையில் காது, மூக்கு, தொண்டை வைத்­தியர் (ஈ.என்.டி)சிசிர பண்­டார எதுல்­கம உட்­பட வைத்­திய குழு­வினர் சத்­திர சிகிச்­சையை மேற்­கொண்­டுள்­ளனர்.

காதுக்கு சமீ­ப­மாக தலைப் பகு­தியில்  மண்­டை­யோட்­டுக்கு அண்­மித்து காணப்­பட்ட ரவையை வெளியே எடுத்­தனர். ஆனால் மண்­டை­யோட்­டுக்கு எது­வித ஆபத்­து­மில்­லாத நிலையில் மேற்கொள்ளப்­பட்­டுள்­ளது. இது தொடர்பில் கருத்துத் தெரி­வித்த மருத்­து­வர்கள் ஆபத்­தான பொருட்­களை சிறு­வர்­க­ளுக்கு எட்டாத தூரத்தில் வைக்க வேண்டும். அவ்வாறு செயற்படாத காரணத்தால் ஏற்பட்ட ஒரு விபரீதம் இது எனவும் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.