Header Ads



இவ்வருடம் மத்திய கிழக்கிற்கு 37.000 பெண்கள் தொழில் தேடி சென்றுள்ளனர்

2017 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 37,002 பெண்கள் தொழில் வாய்ப்புக்களைத் தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

இதேவேளை, 141,725 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டில், 73,226 பெண்களும், 2016 ஆம் ஆண்டில் 65,023 பெண்களும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். அந்த வகையில், 2017 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 37,002 பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இவ்வாண்டு பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் தொகை குறைந்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.