Header Ads



காட்டுயானை தாக்கி 2 ரோஹிங்யர்களும், பாம்பு கடித்து மற்றொருவரும் மரணம்


ரோஹிங்ய அக­திகள் தங்­கி­யி­ருந்த தற்­கா­லிக முகாமை காட்டு யானைகள் தாக்­கி­யதில் ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த தந்­தையும் குழந்­தையும் பலி­யா­கி­யுள்­ளனர். 

திங்­கட்­கி­ழமை அதிகாலை பங்­க­ளாதேஷ் கொக்ஸ் பஸாரின் மலைப்­ப­கு­தியில்இத்தாக்குதல் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் இதில் இருவர் சம்­பவ இடத்­தி­லேயே பலி­யா­கி­யுள்­ள­தா­கவும் மேலும் ஐவர் படு­கா­ய­ம­டைந்­துள்­ள­தா­கவும் கொக்ஸ் பஸார் பொலிஸ் அதி­காரி கேயி கிஸ்லு தெரி­வித்­துள்ளார். 

யானைகள் நட­மாடும் காட்­டுப்­பா­தையை மறித்­த­வாறு மேற்­படி தற்­கா­லிக முகாம்கள் அமைக்­கப்­பட்­டுள்­ள­தா­லேயே அனர்த்தம் இடம்­பெற்­றுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

சம்சுல் அஸ்லம் (வயது 55), செய்­யிதுல் (வயது 2) ஆகிய ரோஹிங்ய அக­தி­களே சம்­ப­வத்தில் பலி­யா­கி­யுள்­ள­தாக அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது. 

விஷப் பாம்பு தீண்­டி­யதில் ரோஹிங்ய முஸ்லிம் ஒருவர் பலி­யா­கி­யுள்ள சம்­ப­வமும் இடம்­பெற்­றுள்­ளது.
பாது­காப்­பற்ற மலைப் பிர­தே­சங்­களில் தற்­கா­லிக முகாம்­களை அமைத்து தங்­கி­யி­ருப்­ப­தனால் பலவித­மான இன்­னல்­க­ளுக்கு ரோஹிங்ய முஸ்­லிம்கள் முகம் கொடுத்து வரு­கின்­றனர் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

மியன்மார் ராக்கைன் பகு­தியில் ஆகஸ்ட் 25 தொடக்கம் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரின் அட்­டூ­ழி­யங்கள் கார­ண­மாக 430,000 இற்கும் அதி­க­மான ரோஹிங்ய முஸ்­லிம்கள் பங்­க­ளா­தேஷில் தஞ்சம் புகுந்­துள்­ளனர். ஐ.நா. சபை மியன்மார் இராணுவத்தின் நடவடிக்கைகளை “இனச்சுத்திகரிப்புக்கான பாடப்புத்தக உதாரணம்” என வர்ணித்துள்ளது.. 

No comments

Powered by Blogger.