Header Ads



கொழும்பில் ரோஹின்யர்கள் மீது 2 ஆவது தடவையாக தாக்குதல் முயற்சி


-BBC-

ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் தங்கியிருந்த இடம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மீண்டும் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட கடும் போக்கு பௌத்தர்களின் முற்றுகைக்குள்ளான நிலையில் அகதிகள் முற்றாக அங்கிருந்து வெளியேறி விட்டனர்.

காலையில் அந்த இடத்தில் பௌத்த பிக்குகளினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக அந்த பகுதியில் அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டதையடுத்து ரோஹிஞ்சாக்கள் போலிஸாரால் பாதுகாப்பு கருதி வேறிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். இதனையடுத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்து சென்றிருந்தனர்.

மாலையில் மீண்டும் ரோஹிஞ்சாக்கள் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டு தங்க வைக்கப்பட்டிருந்தனர். இது பற்றி அறிந்த பௌத்த பிக்குகள் உட்பட பெரும் எண்ணிக்கையிலான கடும் போக்கு பௌத்தர்கள் மீண்டும் அந்த இடத்தில் கூடினர். இதனால் அமைதியற்ற சூழ்நிலை காணப்பட்டது.

அவர்கள் தங்கியிருந்த வீடு கல் வீச்சு தாக்குதலுக்குள்ளானது. ஜன்னல்கள் சேதமடைந்தன. வீட்டு கதவுகள் உடைக்கப்பட்டன. சில வீட்டு உடமைகளும் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து அவர்கள் தொடர்ந்து அந்த இடத்தில் தங்கியிருக்க முடியாத நிலையில் அங்கிருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். போலிஸாரால் பாதுகாப்பாக அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

7 comments:

  1. இதில் எந்தவித மாற்றமும் இல்லை இது இந்த நல்லாசிய்ன் சதித்திட்டம்

    ReplyDelete
  2. இதில் எந்தவித மாற்றமும் இல்லை இது இந்த நல்லாசிய்ன் சதித்திட்டம்

    ReplyDelete
  3. BUDDISM TEACHERS PEACE BUT NOT THIS KIND OF RACISM OR VIOLENCE....

    ReplyDelete
  4. நாடும் நாசமாக போகட்டும் நாட்டிலுள்ள சிங்களவேன்களும் நாசமாகபோகட்டும் .

    ReplyDelete
  5. I think it is end of Buddhism in the world. Very soon Buddhism will vanished... All these problems coming for that... Good Sign.

    ReplyDelete

Powered by Blogger.