Header Ads



அமெரிக்காவின் சொல்லுகேட்டு வடகொரியாவை கைவிடும் 2 முஸ்லிம் நாடுகள்

அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான குவைட் தனது நாட்டுக்கான வட கொரிய தூதுவரை வெளியேற ஒரு மாத காலம் கெடு விதித்திருப்பதோடு வட கொரியாவுக்கான இராஜதந்திரிகளின் எண்ணிக்கையை குறைப்பதாகவும் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியமும் தனது நாட்டில் உள்ள வட கொரிய இராஜதந்திரிகளின் எண்ணிக்கையை குறைத்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

குவைட் எமிர் ஷெய்க் சபாஹ் அல் அஹமது அல் சபாஹ் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டு இரண்டு வாரங்களுக்குள்ளேயே அந்த நாடு இந்த முடிவை எடுத்துள்ளது.

வட கொரிய பணியாளர்களின் தற்போதைய ஒப்பந்த காலம் பூர்த்தியான பின் அவர் மீண்டும் நாட்டுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கவும் குவைட் திட்டமிட்டிருப்பதாக அந்நாட்டு அரச வட்டாரத்தை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

குவைட்டில் 2,000 தொடக்கம் 2,500 வட கொரிய பணியாளர்கள் இருப்பதோடு மேலும் ஆயிரக்கணக்கான வட கொரிய பணியாளர்கள் மத்திய கிழக்கில் தொழில் புரிகின்றனர்.

வட கொரியர்களுக்காக விசா விநியோகத்தை இடை நிறுத்தவும் அந்த நாட்டுடனான அனைத்து வர்த்தக உறவுகள் மற்றும் விமானத் தொடர்புகளை நிறுத்தவும் குவைட் திட்டமிட்டிருப்பதாக தெரியவருகிறது. 

1 comment:

  1. Will this Arab countries do the same think to India for the terror act of Indian President?? Burma? Iran?

    ReplyDelete

Powered by Blogger.