Header Ads



2 வாரத்தில் 73,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் வெளியேற்றம், இன்றும் பற்றியெறிந்த வீடுகள்


மியான்மரில் தீவிரவாதிகளுக்கு எதிரான பிரசாரத்தை அந்நாட்டு ராணுவத்தினர் தொடங்கிய இரண்டு வாரத்திற்கும் குறைவான காலத்திற்குள், 73,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து வங்கதேசம் சென்றுள்ளதாக ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்னும் பலர் வந்துகொண்டிருப்பதாக ஐ.நா செய்தி தொடர்பாளர் விவின் டான் பிபிசியிடம் கூறினார்.

இன்று, மேற்கு மியான்மரில் புகை மேலேழும்பி வருவதைப் பார்க்க முடிந்தது. பற்றி எரியும் கிராமங்களில் இருந்து அப்புகை வந்திருக்கலாம்.

ராணுவப் படையினர் தங்களைச் சுட்டதுடன், வீடுகளுக்கும் தீ வைத்ததாக அகதிகள் கூறுகின்றனர். 

வங்கதேச எல்லையோரம் உள்ள கிராமங்கள் அகதிகளால் நிரம்பி வழிகின்றன. அங்கு கடுமையான உணவுப்பற்றாக்குறை உள்ளதாக உதவிப் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments

Powered by Blogger.