September 08, 2017

1990 இல் வெளியேற்­றப்­பட்ட முஸ்லிம்கள், சித­றுண்டு வாழ்­வது மிகவும் மன­வ­ருத்­தத்­துக்­கு­ரி­யது -

மதத்தின் பேரால் அடி­பட்டு சாவதும், பிரிந்து நிற்­பதும் எமது அறி­யா­மை­யாகும். இதை அனைத்து மதங்­களும் மதத் தலை­வர்­களும் இடித்து உரைக்­கின்­ற­போதும் அதை நாம் கேட்­ப­தாக இல்லை.  மூவின மக்­களும் பகை­மை­களை மறந்து சகோ­த­ரர்­க­ளாக வாழத் தலைப்­பட்டால் இந்த நாட்­டுக்கு இணை இந்த நாடுதான் மட்­டுமே இருக்க முடியும். எனவே, காலம் கடந்த நிலையில் எமது மக்கள் அனை­வரும் ஒன்­று­பட்டு ஒரு­மித்து இந்த நாட்டை முன்­னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல முயற்­சிக்க வேண்டும் என வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கூறினார்.

மன்னார் எருக்­க­லம்­பிட்­டியில் பத்­தா­வது ஹஜ் பெரு­விழாநடை­பெற்­றது. இவ்­வி­ழாவின் இறுதி நாளா­கிய செவ்வாய் கிழமை வட மாகாண சபை உறுப்­பினர் எச்.எம்.றயீஸின் ஏற்­பாட்டில் அழைக்­கப்­பட்ட வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் பிர­தம விருந்­தி­ன­ராக கலந்த கொண்டு பேசு­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். செட்­டிக்­குளம் மக்கள் வங்கி முகா­மை­யாளர் அப்துல் ஹக் முகமட் ஆரூஸ் தமையில் நடை­பெற்ற இறுதி நிகழ்­வின்­போது முத­ல­மைச்சர் சி.வி. விக்­னேஸ்­வரன் இங்கு தொடர்ந்து பேசு­கையில், 

வட மாகா­ணத்தில் மிகப் பெரும் எண்­ணிக்­கை­யி­லான முஸ்லிம் மக்கள், கிராம பகுதி மக்கள் 1990ம் ஆண்டு இப்­ப­கு­தி­யி­லி­ருந்து வெளியேற்­றப்­பட்டனர். நீங்கள் நாட்டின் நாலா பக்­கங்­க­ளிலும் சித­றுண்டு வாழ்­வது மிகவும் மன­வ­ருத்­தத்­துக்­கு­ரி­யது.

இவ்­வாறு வெளியேறிச் சென்ற மக்­களில் கணி­ச­மான தொகை­யினர் மீள தமது பிர­தே­சத்தில் வந்து மீள்­கு­டி­யே­றி­ய­போ­திலும் குறிப்­பிட்ட தொகை­யினர் இடம்­பெ­யர்ந்த இடங்­களில் தமக்­கென இடங்­களை தயா­ரித்துக் கொண்டு அப்­ப­கு­தி­யிலே தொடர்ந்து வாழ்ந்து வரு­கின்­றனர்.

ஒரே குடும்­பம்­போன்று இந்த எருக்­க­லம்­பிட்டி முஸ்லிம் சகோ­த­ரர்கள் வாழ்ந்த பொதிலும் 1990 இல் ஏற்­பட்ட குழப்ப நில­மைகள் அவர்களுக்கு சித­றுண்ட வாழ்க்கை அமைப்பை உரு­வாக்கி விட்­டது. எருக்­க­லம்­பிட்டி வாழ் முஸ்லிம் மக்கள் பற்றி நான் ஓர­ளவு அறிவேன்.

இவர்கள் பகைமை அறிவு அற்­ற­வர்கள். அனைத்து மதத்­தி­ன­ரையும் சகோ­தர்­க­ளாக கரு­து­ப­வர்கள். இவர்­களின் வாழ்வு என்றும் சித­றுண்டு கிடக்­கின்­ற­போதும் இஸ்­லா­மிய மக்­களின் ஐந்­தா­வது இறுதி கட­மை­யான ஹஜ் விழா நிகழ்­வா­னது, எருக்­க­லம்­பிட்டி முஸ்லிம் மக்கள் அனை­வரும் வந்து இங்கு ஒன்­று­கூடி தமது அன்­பையும் மகிழ்­வையும் தெரி­வித்து, இஸ்­லாத்தின் அதியுயர் கடமைகளை சிறப்பற ஆற்ற வேண்டும் என்ற கொள்கையில் 2002 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வானது இவ்வருடமும் சிறப்புற கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது எனவும் கூறினார்.

8 கருத்துரைகள்:

முஸ்லிம்கள் மீண்டும் அவர்களது சொந்த இடங்களுக்கு வரும் போது தடுப்பது யாரு..........?

CM Vigneswaran, atleast you have done this much to Muslim community, but why don't you care about the nass killings by islamic terrorists in Eastern province on early 1990s,
Firt you should raise your voice to resettle the displaced Tamil ppl in Samanthurai , Kathankudi and many other places in Amparai.
About more than 40000 Ramils were displaced by the muslims, and they had covered with the name of politics.
easr bring into glo, and insisit the Srilankan community about the attocity done by muslims.
Do the needful to settle Tamils in muslim majority places.
Tgen talk about y
the setement ib Norhern Province

Why the hell did he refuse to pass a resolution at the Northern Provincial Council condemning LTTE and call their act as ethnic cleansing?

CM is on his correct way, you and your muslim leaders can't even right to criti ise him,
Go and instruct theislamuc leaders to resettle the tamil ppl in Easeter provibce and to handover the grabbed land of tamils by muslims in warly 1990s. Then you xan find true tear from him

Because eastern province has been established before NP and still even single resolution has not been passes against Tamol cleansing by muslim arm forces on 1990s and some villagers were takenover by the muslim jihadis and kimmed tamil children and women like coward.
First East province must pass resolution against that incidents. Then you guys can talk about NP and CM.
Why you are spitting poission.

you are a mental diseased. search for proper medicine to solve your racism and radical disease first and then speak about....

plz let me know if u know anybody to cure this type of disease.
I have to treat lot of muslim leaders and mosque authoritoes first

Post a Comment