Header Ads



மியன்மார் ஆதரவு போராட்டத்திற்கு 17 அமைப்புகளுக்கு தடை - நீதிமன்றம் அதிரடி

மியன்மாருக்கு ஆதரவான ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ள முயற்சித்த சிங்கள அமைப்புகளுக்கு கொழும்பு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மியன்மாரில் ரோஹிங்யா சிறுபான்மை முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்ப்படுவதைக் கண்டித்து சர்வதேசம் முழுவதும் மியன்மார் அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் 17 சிங்கள பௌத்த அமைப்புகள் மியன்மார் அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இன்று பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

பொதுபலசேனா, சிங்கள ராவய, ராவணா பலய, தேசிய பிக்கு முன்னணி, தேசிய முன்னணி உள்ளிட்ட 17 அமைப்புகள் ஒன்றிணைந்து குறித்த ஆர்ப்பாட்டத்தை விகாரமகா தேவி பூங்கா அருகில் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்திருந்தனர்.

எனினும் கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் ரங்க திசாநாயக்க குறித்த ஆர்ப்பாட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார்.

அத்துடன் கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தி, தெவட்டகஹ பள்ளிவாசல், ரோஸ்மீட் பிளேஸ், லிப்டன் சுற்றுவட்டாரம், தர்மபால மாவத்தை, ஹோர்டன் பிளேஸ், எப்.ஆர். சேனநாயக்க மாவத்தை, கன்னங்கர பிளேஸ் ஆகிய பகுதிகளில் ஒன்று சேரவோ ஆர்ப்பாட்டம் நடத்தவோ கூடாது என்றும் நீதிபதி ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.