Header Ads



உடத்தலவின்னயில் செப்.17ல் மாபெரும் வைத்திய முகாம்

கண்டி-உடத்தலவின்ன மடிகே, கலதெனிய பள்ளி வீதியில் அமைந்துள்ள உறவுகளின் நலன்புரி சங்கம் (நேர்ப வெல்பயார் சொசைட்டி) என்ற அமைப்பு தொடர்ச்சியாக  ஐந்தாவது முறையாகவும் வைத்திய முகாமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த வைத்திய முகாம் அமைப்பின் தலைவர் எம். ரிப்கி முஸ்தாக் (கூட்டுறவுப் பரிசோதகர்) செயலாளர் ஏ.எச்.எம். நசார் (வீடமைப்பு பிரிவு மாவட்ட செயலகம்- கண்டி) ஆகியோரின் தலைமையில் உடத்தலவின்ன ஜாமியுள் அஸ்ஹர் மத்திய கல்லூரி, அஷ்ரஃப் கேட்போர் கூடத்தில் 17.09.2017 ஞாயிறு 8 மணி முதல் மாலை 4 மணிவரை  நடைபெறும். 

இந்த முகாமிற்கு கண்டி, பேராதனை மற்றும் இன்னும் பல வைத்தியசாலைகளிலிருந்து வைத்தியர்களும் சுகாதார  அதிகாரிகளும் பெரும் எண்ணிக்கையில் வருகைதர இருக்கின்றார்கள். அத்துடன் வழக்கம்போல் இரத்ததான நிகழ்வும் இந்த வைபவத்தின்போது நடைபெறும் என்று இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அமைப்பின் பொருளாளர் என்.பீ.எம். மர்சூக் (மத்திய மாகாண ஆளுநர் செயலகம்-கண்டி)   குறிப்பிட்டார்.

2013,2014,2015,2016, ஆகிய வருடங்களில் தொடர்ச்சியாக இந்த வைத்திய முகாமில் ஆயிரக் கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு பல்வேறுபட்ட நோய்களைப் பரிசோதித்து சிகிச்சை பெற்று கொண்டதுடன், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கானவர்கள் இரத்ததான நிகழ்விலும் பங்கு பற்றி வந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ் நலன்புரி அமைப்பைத் தோற்றுவித்ததிலும், வைத்திய முகாமை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதிலும் அமைப்பின் தோற்றுவிப்பாளர்களும் முன்னாள் தலைவர்களுமான எச்.எம். சப்ரி (சிலாபம் வைத்திய சாலை), முன்னாள் அதிபர் எஸ்.ஏ.ஜெப்பார் ஆகியோர் பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல்:-  பௌஜீ அல் பயாட்

No comments

Powered by Blogger.