Header Ads



முஸ்லிம்களுக்கு அநீதி என்றால், நான் களத்தில் குதிப்பேன் - கண்ணீருடன் விடைபெற்ற OIC வெதகெதர


-Nusry Muhammad-

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபரஹாதுஹூ

சகவாழ்வு என்பது இஸ்லாத்தைச் சொல்வதற்கான எத்தனை பெரிய ஊடகம் என்பதை நேற்றுத் தான் நான் நிதர்சனமாகக் கண்ணுற்றேன். காத்தான்குடி முன்னை நாள் OIC வெதகெதரவிற்கான பிரியாவிடை வைபவமொன்று நேற்று எங்கள் அல்-மனார் அல்-ராஷித் கேட்போர்கூடத்தில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. சாதாரண பிரியாவிடை வைபவம் தானே என மனதில் நான் எண்ணிக்கொண்ட போதும் ஈற்றில் பெற்ற படிப்பினைகள் காலத்தால் அழியாத எத்தனையோ கருத்துகளை உள்ளத்தில் ஆழப் பதித்துவிட்டுச் சென்றன

இலங்கை போன்ற சிறுபான்மை நாடுகளில் மாற்று மதத்தவர்களுக்கு இஸ்லாத்தை முன்வைப்பதற்கான மிகச் சிறந்த வாயில் எமது பண்பாடுகளாகும். அதிலும் குறிப்பாக இப்படியான சகவாழ்வுச் செயற்றிட்டங்களாகும். நேற்று வெதகெதர OIC காத்தான்குடி பிரமுகர்கள் மத்தியில் கண்ணீர் விட்டழுது பின்வரும் கருத்துகளை பகிர்ந்துகொண்டார்■

1.இப்படியான ஒரு நிகழ்வை இந்த மக்கள் ஏற்பாடுசெய்தமையையிட்டு நான் பெரிதும் அகமகிழ்கிறேன். எனது உயிர் பிரியும் வரை இதை நான் மறக்க மாட்டேன்.

2.காத்தான்குடியை எனது சொந்த ஊராக நினைத்துத் தான் இத்தனை காலமும் நான் சேவையாற்றினேன்.

3.மக்கள் எப்போதும் என்னோடு அந்நியோன்னியமாக உறவாடுபவர்களாக இருந்தார்கள்.

4.உங்களுக்கு ஏதும் பிரச்சினைகள் என்றால் முதலில் உங்கள் மார்க்கத்தின் படி உங்கள் தலைமைகளிடத்தில் சென்று தீர்த்துக்கொள்ளுங்கள். அப்படி முடியாவிட்டால் மட்டுமே பொலிஸ் நிலையத்துக்குச் செல்லுங்கள்.

இப்படி எத்தனையோ நல்ல பல கருத்துகளைப் பகிர்ந்துவிட்டு முஸ்லிம்கள் பற்றிய நல்லெண்ணத்தோடும் நான் ஓய்வுபெற்ற பின் அடிக்கடி தரிசிக்கும் ஊராக காத்தான்குடியை மாற்றிக்கொள்வேன் என்றும் காத்தான்குடி முஸ்லிம்களுக்கு எப்போது அநீதி என்றாலும் அதற்கெதிராக நான் களத்தில் குதிப்பேன் என்றும் தனது உரையை முடித்துவைத்தார்.

இப்படி ஒவ்வொரு ஊர்களிலும் எமது பண்பாடுகள் ஊடாக இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் நல்ல புரிதல்களை நாம் ஏற்படுத்தினால் எத்தனையோ அபூதாலிப்களை நாம் உருவாக்கிவிடலாம்■.

3 comments:

  1. எந்தவொரு நாட்டிலும் இஸ்லாத்தை சொல்வதட்கான வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டாலும் சிறந்த பண்பாட்டுக்கான வாயில்கள் எப்போதும் திறந்தே இருக்கின்றன .இதனை நன்கு பயன்படுத்திக்கொவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும் .

    ReplyDelete
  2. Oic வெதகெதர நல்லவர் !
    அவர் கூறுவது உண்மை தான் !
    அதை நான் கண்கூடாக கண்டுள்ளேன் !

    ReplyDelete

Powered by Blogger.