Header Ads



நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ், கிரிக்கெட் அணிக்கு பாரிய அழிவு - நாமல்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் ஏற்பட்டுள்ள நிலைமையை கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்க்க முடிந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கெட் விளையாட்டின் பிளவு கடந்த ஞாயிற்றுக்கிழமை தம்புள்ளையில் இடம்பெற்ற போட்டியின் பின்னர் ஏற்பட்டது. இலங்கை அணிக்கு ஏற்பட்ட தோல்விக்கு மத்தியில் முதல் முறையாக பார்வையாளர்கள் கோபமடைந்து செயற்பட்டனர்.

தற்போது வரையில் இளம் குழுவாக எழுந்து வரும் அணிக்கு மக்களின் ஆதரவு அவசியம். தம்புள்ளை சம்பவம் வருத்தப்பட வேண்டிய ஒரு விடயம்.

இன்னமும் அணிக்கு வலுவை ஏற்படுத்தும் வகையில் பார்வையாளர்கள் செயற்பட்டிருக்க வேண்டும். அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தொடர்பில் விமர்சனங்கள் காணப்பட்ட போதிலும் அவர் நேரடியாக தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

கிரிக்கெட் அணிக்கு பாரிய அழிவு நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டும், அரசியலும் ஒன்று சேரக் கூடாதென்பது பிரதான விடயமாகும். எனினும் தற்போது கிரிக்கெட் விளையாட்டிற்கு அதுவே ஏற்பட்டுள்ளது.

போட்டியில் வெற்றி தோல்வி என்பது சாதாரண விடயம் என்ற போதிலும், நிர்வாகம் விளையாட்டில் தலையிடாமல் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வீரர்களுக்கு சுதந்திரமாக செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. You were prepared this by giving first priority to your game..

    ReplyDelete
  2. We had only one to get proud of it and that is also has gone. There is nothing left to loose. What the rulers are doing. When I write this comment it came to my mind that 96 out 225 are without even (O/L). Under this circumstances how can we expect efficiency.

    ReplyDelete

Powered by Blogger.