Header Ads



இது ஒரு, சோகமயமான விழிப்புணர்வு செய்தி


இந்தியாவில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட 10 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்திருந்த நிலையில் அவருக்கு கருக்கலைப்பு செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது, அச்சிறுமி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

பாலியல் வல்லுறவிற்கு ஆளான பத்து வயது சிறுமியும் அவளது குழந்தையும் நலமுடன் இருப்பதாக, அச்சிறுமிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.

அச்சிறுமிக்கு கடந்த திங்கள்கிழமை சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிட்டிருந்தாகவும், ஆனால், அவளது ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் அறுவை சிகிச்சை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் மருத்துவர் தாசரி ஹரிஷ் தெரிவித்தார்.

கடந்த ஜூலை மாதம் வயிற்று வலி எடுத்ததையடுத்து, சிகிச்சைக்காக அச்சிறுமியை அவளது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவள் கருவுற்று இருந்தது தெரியவந்தது.

தனது உறவினரால் பாலியல் வல்லுறவிற்கு ஆளானதாகக் கூறப்படும் அச்சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய இந்திய நீதிமன்றம் ஒன்று முன்பு அனுமதி மறுத்திருந்தது. கருக்கலைப்பு செய்வது, அந்த சிறுமியின் உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என மருத்துவர்கள், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்திருந்தனர்.

வீட்டு வேலை செய்யும் சிறுமியின் தாய், தனது பத்து வயது மகள் கர்ப்பமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோதுதான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. தனது தாய் வேலைக்கு சென்றிருக்கும்போது, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த, தாயின் இரண்டாவது கணவர், இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று எச்சரித்ததாக சிறுமி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அதற்குள் அந்த சிறுமியின் கரு 32 வாரங்களைக் கடந்து வளர்ந்து விட்டது. இதனால், அவரது கருவைக் கலைத்தால் அது சிறுமிக்கும் சிசுவுக்கும் ஆபத்தாக முடியலாம் என்று நீதிமன்றம் நியமித்த மருத்துவர்கள் குழு அறிக்கை அளித்தது. இதையடுத்து அச்சிறுமியின் கருவை கலைக்கக் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில் சண்டீகரில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த சிறுமியின் சிசு 2.2 கிலோ எடையுடன் உள்ளது. அறுவை சிகிச்சை செய்த 16 பேர் கொண்ட மருத்துவக் குழுவுக்கு தலைமை வகித்த மருத்துவர் ஹரிஷ், அறுவை சிகிச்சை செய்ய 90 முதல் 105 நிமிடங்கள் வரை ஆனது என்று கூறினார்.

அந்தச் சிறுமியின் குடும்பம், அந்த குழந்தையை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்காததால், அது தத்தெடுக்கப்படும் வரை, குழந்தைகள் பாதுகாப்புக் குழுவால் பராமரிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பத்து மாதங்களுக்கு முன்னரே பிறந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தையின் உடல்நலம் தற்போது நிலையாக உள்ளதால், குழந்தைகள் பிரிவுக்கு இப்போது அந்த சிசு மாற்றப்பட்டுள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவின் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் - புள்ளிவிவரங்கள்

•இந்தியாவில்155 நிமிடங்களுக்கு ஒருமுறை 16 வயதுக்கு குறைவான ஒரு குழந்தை பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறது.
•10 வயதுக்கும் குறைவான குழந்தை ஒவ்வொரு 13 மணி நேரத்துக்கு ஒரு முறை வல்லுறவுக்கு ஆளாகிறது.
•இந்தியாவில் இருக்கும் பெண்களில் 24 கோடிப் பேர், 18 வயதுக்கு முன்னரே மணமானவர்கள்.
•அரசு நடத்திய ஒரு ஆய்வில் கலந்துகொண்ட 53.22% குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறினார்கள்.
•பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் 50% பேர், குழந்தைகளுக்கு நன்கு பழக்கப்பட்டவர்கள்.

1 comment:

Powered by Blogger.