Header Ads



முசலி முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கு எதிரான மனு, உயர் நீதிமன்றால் தள்ளுபடி

முசலிப் பிர­தே­சத்தில் நடை­பெற்­று­வரும் அனைத்து செயற்­பா­டு­களும் அனைத்து குடி­யேற்­றங்­களும் சட்­ட­வி­ரோ­த­மா­ன­வை­யெ­னவும், காணிகள் வழங்­கப்­பட்­டி­ருப்­பது சட்­டத்­திற்கு முர­ணா­ன­தெ­னவும் அவற்­றுக்கு  தடை உத்­த­ரவு பிறப்­பிக்கும் படியும் உயர்­நீ­தி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த மனுவை உயர்­நீ­தி­மன்றம் தள்­ளு­படி செய்­தது.

அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் இந்த சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­க­ளுக்கு உ டந்­தை­யாக இருப்­ப­தா­கவும் மனுவில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. 

அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணிகள் 1990 ஆம் ஆண்டு வெளி­யேற்­றப்­பட்ட முஸ்லிம் மக்­களின் அனைத்து ஆவ­ணங்­க­ளையும் மன்றில் சமர்ப்­பித்­தனர். 2012 ஆம், 2017 ஆம் ஆண்­டு­களில் வெளி­யி­டப்­பட்ட வில்­பத்து தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தல்கள், சட்­ட­ரீ­தி­யான முறையில் முறை­யாக வெளி­யி­டப்­ப­ட­வில்லை. அப்­ப­குதி மக்­க­ளுக்கு எவ்­வித அறி­வித்­தலும் வழங்­கப்­ப­டாது வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது என்­பதை நீதி­ய­ரசர் குழா­மிற்கு தெளி­வு­ப­டுத்­தினர். இத­னை­ய­டுத்தே மூவ­ர­டங்­கிய நீதி­ய­ரசர் குழு வழக்­கினை தள்­ளு­படி செய்­தது.

இலங்கை வன ஜீவ­ரா­சிகள் மற்றும் இயற்கை பாது­காப்பு அமைப்பு, சூழ­லியல் பௌண்டேசன் என்­பன தாக்கல் செய்­தி­ருந்த இவ்­வ­ழக்கில் பிர­தி­வா­தி­க­ளாக ஜனா­தி­பதி, அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் உட்­பட 10 பேர் பிர­தி­வா­தி­க­ளாக பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தனர். 

இவ்­வி­ப­ரங்கள் நேற்று கொழும்பில் நடை­பெற்ற அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் ஊடக மாநாட்டில் வெளி­யி­டப்­பட்­டன. அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் அர­சியல் யாப்பு மற்றும் சட்ட விவ­கார பணிப்­பாளர் சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது; 

உயர்­நீ­தி­மன்றம் குறிப்­பிட்ட வழக்­கினைத் தள்­ளு­படி செய்­துள்­ளமை முசலி பிர­தேச குடி­யேற்­றங்கள் சட்­ட­பூர்­வ­மா­னது  என ஏற்றுக் கொள்ளும் வகையில் அமைந்­துள்­ளது. 2012, 2017 ஆம் ஆண்­டு­களில் வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்தல் மூலம் மீள் குடி­யே­றி­யுள்ள மக்கள் மத்­தியில் நில­வி­வந்த சந்­தேகம் வழக்குத் தள்­ளு­படி செய்­யப்­பட்­ட­தன்­ மூலம் நீங்­கி­யுள்­ளது. 

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் முசலி பிர­தேச மீள்­கு­டி­யே­றி­யுள்ள மக்­களின் 30 முறைப்­பா­டுகள் சமர்­பிக்­கப்­பட்­டுள்­ளன. தேவை­யான ஆவ­ணங்­களும் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளன. அது­தொ­டர்­பான விசா­ர­ணைகள் தொடர்ந்தும் நடை­பெற்று வரு­கின்­றன. ஜனா­தி­ப­தி­யினால் மாவில்லு பேணற்­காடு வர்த்­த­மானி மற்றும் 2012 ஆம் ஆண்டின் வர்த்­த­மானி தொடர்பில் ஆராய ஐவர் அடங்­கிய குழு­வொன்றும் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. 

எனவே, முசலி பிர­தேச மீள்­கு­டி­யேற்­றங்கள் சட்­ட­ரீ­தி­யா­னவை. அவை சட்­ட­ரீ­தி­யற்­றவை என்று தெரிவிக்கப்பட்டால் தேவையேற்படின் அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கும் நாம் தயாராக இருக்கிறோம். உயர்நீதிமன்றம் வழக்கினைத் தள்ளுபடி செய்துள்ளமை அங்கு மீள்குடியேறியுள்ள மக்களுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றார். 

இம் மாதம் 4 ஆம் திகதியே உயர்நீதிமன்றம் வழக்கினைத் தள்ளுபடி செய்தது.

No comments

Powered by Blogger.