Header Ads



புதிய நீதி அமைச்சராவது, ஞானசாரருக்கு எதிராக நீதியை நிலைநாட்டுவாரா..?

புதிய நீதி அமைச்சராவது ஞானசார தேரருக்கு எதிராக நீதியை நிலைநாட்டுவாரா என பானதுறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பபட்டுள்ளதாவது,

கடந்த அரசாங்கத்திலும் அண்மைக்காலத்திலும் ஞானசார தேரருக்கி எதிராக நாட்டில் நீதி நிலை நாட்டப்படவில்லையென்ற குற்றச் சாட்டு நிலவி வருகிறது.இலங்கை முஸ்லிம்கள் மிக நீண்ட காலமாக ஞானசார தேரர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.இதனை முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தடுக்கின்றார் என்றே எமது முட்டாள்கள் சிலர் கூறியும் நம்பியும் வந்தனர்.

தற்போது இந் நல்லாட்சியானது இலங்கை நாட்டில் நீதியை நிலை நாட்ட புதியதொரு நீதி அமைச்சரை கொண்டு வந்துள்ளது. இந் நீதி அமைச்சர் என்ன செய்யப் போகிறார் என்பது பலரதும் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தன் மீது முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வந்த நீதி அமைச்சர் என்ன செய்யப் போகிறார் என பாப்போம் என கூறியுள்ளார்.

இங்கு ஒரு விடயத்தை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். அண்மையில் கல்முனையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அம்பாறைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.அந் நேரத்தில் தற்போதைய நீதி அமைச்சர் தலதா அத்துக்கொரளவே குறித்த அமைச்சுடன் சம்பந்தப்பட்ட அமைச்சராக இருந்தார். 

குறித்த அலுவலகம்  அம்பாறைக்கு இடமாற்றப்படாதென்ற உத்தரவாதத்தை அவர் வழங்கிய நிலையில் அது இடமாற்றப்பட்டிருந்தது. இதிலிருந்து தற்போதைய நீதி அமைச்சர் இனவாதிகளின் மகுடிக்கு எப்படி செயற்படுவார் என்பதை அறிந்து கொள்ளமுடியும்.

கல்முனை வேலைவாய்ப்பு பணியக விவகாரத்தில் நீதியை நிலை முடியாது போன அமைச்சர் தலதா அத்துக்கொறல்ல, நீதி அமைச்சராக வந்து முஸ்லிம்களுக்கு நீதியை பெற்றுக்கொடுபார் என நம்புவது பகல் கனவாகும். புதிய நீதி அமைச்சரை கொண்டு வந்த பிறகும் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் இவ் இனவாதத்தின் பின்னால் இவ்வாட்சியாளர்கள் உள்ளமைக்கான இன்னுமொரு சான்றாகும்.

1 comment:

  1. Justice minister can't do anything
    WE SHOULD CHANGE OUR LIFE STYLE
    THEN ALLAH WILL HELP US

    ReplyDelete

Powered by Blogger.