Header Ads



இன்று தெளி­வான தீர்­மா­னங்­களை எதிர்­பார்க்­கின்றோம் - மனோ

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இன்று திங்­கட்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் 20ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்கும் பிர­தான வழி­ந­டத்தல் குழு என்­பன தொடர்பில் தெளி­வான தீர்­மா­னங்­களை எதிர்­பார்க்­கிறோம் என்று தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் தெரி­வித்தார்.

பிர­தான வழி­ந­டத்தல் குழு­வுக்கு சில கட்­சிகள் தமது யோச­னை­களை இது­வரை முன்­வைக்­காமல் இருக்­கின்­றமை தொடர்­பாக எமக்கு பாரிய சந்­தேகம் எழு­கி­றது. எனவே இவை தொடர்பில் நாம் ஜனா­தி­ப­தி­யிடம் கேள்வி எழுப்பி எமது சந்­தே­கங்­களை நிவர்த்தி செய்­து­கொள்­ள­வுள்ளோம் என்றும் குறிப்­பிட்டார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் இன்று -21- நடை­பெ­ற­வுள்ள  கட்சித் தலை­வர்கள் கூட்டம் தொடர்பில் கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அமைச்சர் மனோ கணேசன் இவற்றைக் குறிப்­பிட்டார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான இன்­றைய கட்சித் தலை­வர்கள் கூட்­டத்­தின்­போது எமது பல்­வேறு சந்­தே­கங்­க­ளுக்­கான தீர்­வு­களை எதிர்­பார்க்­கின்றோம். இந்தக் கூட்­டத்தில் ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் பங்­காளிக் கட்­சிகள் கலந்­து­கொள்­ள­வுள்­ளன. அதே­போன்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­கின்றோம். இந்தக் கூட்­டத்­தின்­போது முக்­கி­ய­மாக 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பேசப்­ப­ட­வி­ருக்­கி­றது. 

மாகாண சபைத் தேர்ல்­களை ஒரே தினத்தில் நடத்­து­வ­தற்­காக 20 ஆவது திருத்தச் சட்­டத்தை கொண்­டு­வ­ரு­வ­தற்கு அமைச்­ச­ர­வையில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அதன்­போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி அமைச்­சர்­களும் அமைச்­ச­ர­வையில் இணக்கம் தெரி­வித்­தி­ருந்­தனர். ஆனால் பின்னர் சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்தில் அந்த 20 ஆவது திருத்தச் சட்­டத்தை எதிர்ப்­ப­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தாக அறிந்தோம். 

அதா­வது மாகாண சபை தேர்­தல்­களை ஒரே தினத்தில் நடத்­து­வதால் ஒரு சில மாகாண சபை­களின் தேர்ல்கள் பிற்­போ­டப்­ப­டு­வதை சுதந்­திரக் கட்சி விரும்­ப­வில்லை எனத் தெரி­கின்­றது. எனவே தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் நிலைப்­பா­டா­னது தேர்­தல்கள் உரிய காலப்­ப­கு­தியில் நடத்­தப்­பட வேண்டும் என்­ப­தாகும். எனவே இது தொடர்பில் ஜனா­தி­பதி தலை­மை­யி­லான கூட்­டத்தில் இறுதி முடிவு எடுக்­கப்­படும் என நம்­பு­கின்றோம். 

அதே­போன்று அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் பிர­தான வழி­ந­டத்தல் குழு தொடர்­பா­கவும் சில சிக்­கல்கள் உள்­ளன. இந்தக் குழு­வுக்கு ஒரு சில கட்­சிகள் எழுத்து மூலம் தமது யோச­னை­களை முன்­வைத்­துள்­ளன. ஐக்­கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் ஜே.வி.பி. என்­பன வாய்­மொழி மூலம் தமது யோச­னை­களை முன்­வைக்­க­வுள்­ளன. எமது தமிழ் முற்­போக்குக் கூட்­டணி மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், ஈ.பி.டி.பி., அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சிகள் எழுத்து மூலம் யோச­னை­களை முன்­வைத்­துள்­ளன. ஜாதிக ஹெல உறு­ம­யவும் முன்­வைப்­ப­தாக அறி­வித்­தி­ருக்­கி­றது. ஆனால்­ஸ்ரீ­லங்கா சுதந்­திரக் கட்­சியும் பொது எதி­ர­ணியும் இது­வரை யோச­னை­களை முன்­வைக்­க­வில்லை. 

சுதந்­திரக் கட்சி சார்பில் இந்தக் குழுவில் பங்­கு­பற்றும் அமைச்சர் நிமல் சிறி­பா­ல­விடம் கேட்டால் அது தொடர்பில் ஆராய குழு நியமிக்கப்பட்டதாக கூறுகிறார். ஆனால் இதுவரை யோசனைகள் முன்வைக்கப்படவில்லை. இது இழுத்தடிப்பா என்ற சந்தேகம் எமக்கு ஏற்படுகின்றது. இந்த இழுத்தடிப்பை தொடர்ந்து அனுமதிக்க முடியாது. எனவே இந்த விடயம் குறித்தும் ஜனாதிபதியிடம் ஒரு முடிவை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார். 

No comments

Powered by Blogger.