Header Ads



மன்சூரின் கடைசி ஆசையை, நிறைவேற்றதுடிக்கும் மர்யம்


மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ. ஆர்.எம் மன்சூர் 2002ம் ஆண்டு குவைத் நாட்டுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டு அந்த பதவி வகித்த காலப்பகுதியில் பள்ளிவாயல்கள் , தென்கிழக்குப் பல்கலைக்கழகம் போன்றவற்றுக்கு கட்டடம் , பெரும்தொகை பணம் அது போல பல வழிகளில் உதவிகளை செய்தார்

அவரின் முயற்சியின் மூலம் சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசல் வளவினுள் குவைத் அரசினால் அமைக்கத் திட்டமிடப்படிருந்த முஸ்லிம் கலாச்சார ஆய்வு நிலையம், குர்ஆன் மதரசா, வாசிகசாலை, கூட்ட மண்டபம் போன்றவற்றை உள்ளடக்கிய இஸ்லாமிய கலாச்சார நிலையம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது

ஆனால் அது கட்டடமாக வளரவில்லை அப்பணத்தை குவைத் அரசிலிருந்து எடுத்து கொள்ள சிரமமாக மாறிவிட்டது கறைபடியாதவரின் கனவு நனவாகவில்லை கவலையுடன் இருந்தார்

தன்னால் ஆரம்பி க்கப்படயிருந்த இஸ்லாமிய கலாச்சார நிலையம் கட்டடமாக மாறவேண்டும் என்ற கவலையுடனும் ,கண்ணீருடனும்  அவர் காணப்பட்டார்

கனவை கைவிடவில்லை. அவர் மரணத்தை சுவைக்கும் முன்னர் அதாவது இரண்டு மாதங்களுக்கு முன் 17.5.2017 அத்தினத்தில் இலங்கைக்கான குவைத் தூதுவர் கலாப் எம். டாஹிர் அவர்களை தூதவராலயத்தில் சந்தித்து, இந்த நிறைவேறா போன இத் திட்டத்தை நிறைவேற்றித் தருமாறும் அது போல தென்கிழக்குப் பல்கலைக்கழக தேவைகளையும் கட்டாயம் செய்து தர வேண்டும் வேண்டிக்கொண்டார்

அவரின் மகளான சகோதரி மர்யம் மரணித்த தந்தையின் அறைக்கு சென்றார். தன் தந்தையின் அறையில் இஸ்லாமிய கலாச்சார நிலைய ஆவணங்களை கண்டவுடன் அதிர்ச்சிக்குள்ளானார்

தனது தந்தை நோயில் பிடிக்கப்பட்ட காலப்பகுதில் கூட இங்கு சென்றாரா ?

தான் அவுஸ்திரலியா வசித்த காரணத்தினால் தெரியாமல் போய்விட்டதே என அமைச்சரின் மகளான மர்யம் அழுதார்

முன்னாள் அமைச்சர் மரணிக்கும் நேரத்தில் குவைத் தூதுவர் நாட்டில் இருக்கவில்லை

அனுதாபம் தெரிவிப்பதற்காக குவைத் தூதுவர் மரணித்த அமைச்சரின் மகளான மர்யமுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கவலையுடன் உரையாடினார் அந்த சந்தர்ப்பத்தில் மறைந்த முன்னாள் அமைச்சரின் மகளான மர்யம் தூதுவரே! எனது தந்தையின் கடைசி ஆசையை அல்லாஹ்வுக்காக நிறைவேற்றித் தாருங்கள் என மன்றாடினார்

இதைக்கேட்ட இலங்கைக்கான குவைத் தூதுவர் கலாப் எம். டாஹிர் கவலைவேண்டாம் நிச்சயம் நிறைவேற்றி வைப்பேன் என வாக்குறுதியளித்துள்ளார்.

எம் சமூகம் சார்பாக சகோதரி மர்யமுக்கு பல கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு அவரின் கனவு நனவாக பிராத்திக்கின்றேன்.

ஸபா ரௌஸ் கரீம் 

No comments

Powered by Blogger.