Header Ads



இலங்கையின் முதலாவது, பெண் நீதி அமைச்சர்


புதிய நீதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட தலதா அத்துகோரள இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் நீதி அமைச்சர் ஆவார்.

வரலாற்றில் முதற் தடவையாக ஒரு பெண்ணுக்கு நீதித்துறை அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக பதவி வகித்த விஜயதாச ராஜபக்ஸ பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிய நீதி அமைச்சராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று காலை இவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

இதில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெர்னாண்டோ உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த இவர் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராவார்.

1963ஆம் ஆண்டு மே மாதம் 30ஆம் திகதி பிறந்த இவர் ஒரு சட்டத்தரணியுமாவார்.

இதேவேளை, இலங்கை வரலாற்றில் முதல் பெண் நீதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ள தலதா அத்துகோரளவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

No comments

Powered by Blogger.