Header Ads



சிங்கள இலக்கியம் மூலம், சமய பணிபுரியும் ஸெனீபா

சிங்­க­ளத்தில்: சகீப் ஷாம்  (தன்­வீரி)  தமிழில்: ஏ.எல்.எம்.சத்தார். 

பிர­பல சிறு­கதை, நாவல் இலக்­கிய எழுத்­தா­ள­ரான ஸெனீபா ஸனீர் தேசிய சர்­வ­தேச  விரு­துகள் பெற்ற ஒரு படைப்­பி­லக்­கிய கர்த்­தா­வாகக் திகழ்­கிறார். சிங்­களம்  மற்றும் ஆங்­கில மொழி­களில் ஆக்க இலக்­கி­யங்கள் படைத்து வரும் இவர், எந்­த­வொரு சம்­ப­வத்­துக்கும்  புது­மெ­ரு­கேற்றி, அதற்கு  இஸ்­லா­மியப்  கோட்­பா­டு­க­ளையும் புகுத்தி சுவை­பட வாச­கர்­க­ளுக்கு  வழங்­கு­வதில் வல்­லவர்.  இவ­ரது மொழி வளத்தால்  வாச­கர்கள் கவர்ந்து ஈர்க்­கப்­ப­டு­கி­றார்கள். சிங்­கள மொழி  ஊடாக இஸ்­லா­மியப் படைப்­பி­லக்­கி­யங்­களை  உரு­வாக்­கு­வதில் தன்னை அர்ப்­ப­ணித்து வரு­கிறார்.  மிகவும் அப­ரி­மி­த­மான பொறுப்­பு­ணர்­வுடன்  சிர­மங்­க­ளையும்  பொருட்­ப­டுத்திக் கொண்டு, இஸ்­லா­மிய விழு­மி­யங்­களைப் பிர­தி­ப­லிக்கும் நாவல், சிறு கதை­களை ஊட­கங்கள் ஊடாக  சிங்­கள வாச­கர்­க­ளுக்கு வழங்கி வரு­கிறார். இவ­ருடன் சிங்­கள மொழியில் மேற்­கொள்­ளப்­பட்ட செவ்­வியின் தமி­ழாக்கம் இங்கு தரப்­ப­டு­கி­றது. 

கே: நீங்கள் ஓர் எழுத்­தாளர் என்ற வகையில், இஸ்­லா­மிய இலக்­கியம் தொடர்­பாக அதிக கரி­சனை காட்­டி­வ­ரு­வதன் பின்­னணி என்ன?

சிறு பரா­யத்­தி­லி­ருந்தே எனக்கு எழுத்­தார்வம் இருந்து வந்­துள்­ளது. எனது 16 ஆவது வய­திலே முத­லா­வது நாவலை வெளிக்­கொ­ணர்ந்தேன். அதனைத் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்­றாக  நான்கு நாவல்­களை  எழு­தி­யுள்ளேன். அவை­யெல்லாம் சிறு­பிள்ளை  விளைத்த  வேளாண்­மை­யா­கவே இப்­போது நான் கரு­து­கிறேன். தொடர்ந்து  நூல்கள் வாசிப்­பதன் மூலம்  என்னை வளர்த்துக் கொண்டேன். ஆனால் எனது  இளமைக் காலங்­களில் வாசித்த எந்­த­வொரு  நூலி­லா­வது முஸ்லிம் சான்­றுகள் எத­னையும் கண்டு  கொள்ள முடி­ய­வில்லை. சற்று வய­தே­றிய பின்­னர்தான்  முஸ்லிம் நாடு­களில் பெரும் பர­ப­ரப்பை  ஏற்­ப­டுத்­திய நூல்­களை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்­தது. 

சிங்­கள மொழி வாச­கர்கள் மத்­தி­யிலே இத்­த­கைய நூல்கள்  பிர­பல்யம் பெற்­றி­ருந்­தன. முஸ்­லி­மல்­லாத  எனது தோழிகள் மேற்­படி  நூல்­களைக் கொண்டு வந்து என்­னிடம் கருத்­து­களைக் கேட்கத்  தலைப்­பட்­டனர்.  நான் முஸ்லிம்  பாட­சா­லையில் கற்­ற­போ­திலும்   இஸ்லாம் சமயம் குறித்த போதிய சிந்­தனை என்­னிடம் இருக்­க­வில்லை. பிர­போ­தய மாதாந்த சஞ்­சி­கையைப் படித்­ததன் மூலம் சில விட­யங்கள் குறித்து தெளிவைப்  பெற்றுக் கொண்டேன்.  பரீட்­சையில் தேர்ச்சி பெறு­வ­தற்கே சமய அறி­வு­களைத் திரட்டிப் பெற்றுக் கொண்டேன்.  இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி­யென்ற தெளிவு அப்­போது என் மனதில் தோன்­ற­வில்லை. 

பெண் மஹ்­மூ­தியின் ‘தெவி­யன்கே அட­ய­விய’  (Not without my daughter)  ‘காந்­தா­ரயே குசும’  (Desert flower) ஆகிய நூல்­களைப் படித்த பின்னர், அவை ஒரு­வரின்   அனு­ப­வத்தின் வெளிப்­பாடு அல்­லது சமூ­க­மொன்றின் சடங்கு, சம்­பி­ர­தாயம் அன்றி,  இஸ்­லா­மிய  சட்ட திட்­டங்கள்  அல்ல என்ற எண்­ணமே என் மனதில்  தோன்­றின. பரப்­பப்­பட்டு வரும் இந்த தவ­றான கருத்தை இல்­லாமல் செய்ய வேண்டும்  என்று   எண்­ண­லானேன். எனக்கு குறிப்­பிட்­ட­ளவு அறிவு இருந்­த­தனால் அவ்­வாறு  கால் பதிக்­கவும் விரும்­ப­வில்லை. நூலாக்கம் செய்­வதில் உண்­மை­யி­லேயே அச்ச உணர்வே ஏற்­பட்­டது.

இஸ்லாம் சம்­பந்­தப்­பட்ட முஸ்­லிம்­க­ளது நல்ல பழக்க   வழக்­கங்கள் அடங்­கிய நூலொன்றை யாரா­வது  எழு­து­வார்கள் என்றே நான் நினைத்தேன். அதனால்  அதனைப் பற்றி நான் எழு­த­வில்லை. அத்­துடன் பிற சமூகம் குறித்து எழுதும் போது தன்­னை­ய­றி­யா­மலே  தவ­றுகள் நிகழ இட­முண்டு. எம்மால் எழு­தப்­படும்  அனைத்து விட­யங்­க­ளுக்கும் இந்த உல­கத்­திலும்  மறு­மை­யிலும் பதில் சொல்­லி­யாக வேண்டும் என்ற அச்சம் எனக்­கி­ருந்­தது. இத்­த­கைய கார­ணங்­க­ளினால் நான் எழுத்­து­ல­கி­லி­ருந்து சில வரு­டங்கள் தூர­மா­கி­யே­யி­ருந்தேன்.  

கே:ஆன்­மீகப் பண்பை வளர்க்கும்  வகையில் தானே மீண்டும் இலக்­கிய  உலகில் கால் பதித்­தீர்கள்? 

ஆம் அப்­ப­டித்தான். ஆன்­மீ­கத்தை மைய­மாக  வைத்தே  இலக்­கியம் படைக்­க­லானேன். எந்த ஊர், பெய­ரையும் பயன்­ப­டுத்­தாது பிறந்த குழந்­தை­யொன்று   தன் கண்­களால் உல­கத்தைப் பார்ப்­பது போன்ற  உணர்வை வெளிப்­ப­டுத்தும் விதத்தில் நூலை  எழு­தினேன்.  உலகம்  தானாக உரு­வா­க­வில்லை என்ற கருத்தை அதில் பிர­தி­ப­லிக்கச் செய்தேன். பின்னர் 2007 ஆம் ஆண்டில் இஸ்­லாத்தின்  சிறப்­பு­களை  வெளிக்­கொ­ண­ரக்­கூ­டிய  படைப்­பு­களை ஆக்க வேண்டும் என்ற உணர்வு துளிர்­விட்­டது. 

கே:உங்கள் ஆக்­கங்­க­ளி­னூ­டாக சிறந்த வாசகர்  வட்­ட­மொன்று உரு­வாக்கம் பெற்­றி­ருக்­கின்­றதா?  

உண்­மை­யி­லேயே எனது நூல்­களைப் படித்தோர்  மத்­தியில் சிந்­தனைத் தெளி­வொன்று உரு­வாக்கப்  பெற்­றி­ருப்­பதை என்னால் உணர முடி­கி­றது. ‘புதின்ன இட­தென்ன’ ஆன்­மீ­கத்­துக்கு வழி­வி­டுங்கள். நூல்   ஊடாக  பிறந்த குழந்­தைக்கும் வாழும் உரிமை உண்டு  என்ற தக­வலை சமூ­கத்­தின்முன் கொண்டு  சென்­றி­ருக்­கிறேன். இந்­நூலின் வாச­கர்கள் உள்­ளங்­களில் எனது கருத்­துகள்  தாக்கம் செலுத்­தி­யதைக்  கண்டேன். கருச் சிதைவு செய்­வது பாவ­மான காரியம்  என்­பதை ஏற்­றுக்­கொண்­டனர். இந்­நூலை வாசித்த தாதி­யொ­ருவர் யதார்த்த பூர்­வ­மான விட­யங்­களை இந்நூல் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக கருச்­சி­தைவுப் பணி­களில் ஈடு­பட்ட  தனது அனு­பவ  உண்­மை­களை  முன்­னி­றுத்தி எனது நூலை அங்­கீ­க­ரித்தார். 

எனது மற்­றொரு படைப்­பான  ‘டியர் டயரி’  சிறு­க­தையை வாசித்த இந்­தி­யாவைச்  சேர்ந்த பொறி­யி­யல்­துறை மாணவர் ஒருவர், இக்­கதை மூலம் அவர் அடைந்த  மன­மாற்றம்  பற்றி நீண்ட கடி­த­மொன்றை எனக்கு அனுப்­பி­யி­ருந்தார். அவர் இக்­க­தையைப் படிக்கும் வரை முஸ்­லிம்­களின் வாழ்க்கை  முறை பற்றித் தெரி­யாத நிலையில் அதற்­கெ­தி­ரான  சிந்­த­னை­யுடன் இருந்­த­தா­கவும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருடன் வைராக்­கிய மனப்­பான்­மை­யு­டனே  காலம் கடத்­தி­ய­தா­கவும் தனது தவ­றான வழி­முறைக் குறித்து  கடி­தத்தில் குறிப்­பிட்­டி­ருந்தார்.  குறிப்­பிட்ட  எனது ஆக்கம்  தற்­செ­ய­லாக கிடைக்­கப்­பெற்று வாசித்­த­தா­கவும் வாசித்த பின்னர் அன்­றி­ரவு முழு­வதும் அழுது பிரா­யச்­சித்தம் தேடி­ய­தா­கவும் தனது உள்­ளக்­கி­டக்­கையை வெளி­யிட்­டி­ருந்தார். இப்­போது அவர் இஸ்­லா­மிய  நெறி முறைக்­கி­ணங்க  வாழ்­வ­தோடு,  அவ­ரது  குடும்ப வாழ்வும் மிகவும் திருப்­தி­யான முறையில்  நடந்­தே­று­வ­தா­கவும் தனது திருந்­திய  நிலைப்­பாட்­டையும்  குறிப்­பிட்­டி­ருந்தார்.

3 comments:

Powered by Blogger.