Header Ads



தவறானவர்களின் கரங்களில், ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்

“ஸ்ரீ லங்கா விமான கம்பனி உரிய தருணங்களில் தவறான முடிவுகளை எடுத்து, நாட்டுக்கு ஏன் இவ்வாறு நட்டத்தை ஏற்படுத்திவிட்டது என விளங்கவில்லை” என, விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர், 

“ராஜபக்ஷ அரசாங்கமே எயார் பஸ் நிறுவனத்துடன் 4 எயார் பஸ் விமானங்களை வாங்குவதற்காக செய்யப்பட்ட ஒப்பந்தத்தை இரத்து செய்ய தீர்மானித்தது. நல்லாட்சி அரசாங்கம் புதிய பணிப்பாளர் சபையை நியமித்த பின்னர் நிலைமை மேலும் மோசமாகியது 

“கோப் அறிக்கை தொடர்பாக, எயார் பஸ் விமான நிறுவனத்துடன் செய்யப்பட்ட ஒப்பந்தத்தை ராஜபக்ஷ அரசாங்கம் இரத்து செய்தது. 

“தேசிய விமான நிறுவனத்தால் தொடர்ச்சியாக நட்டம் ஏற்பட்டு வருவதையிட்டு, கோப் அறிக்கை எச்சரித்ததால் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் புதிய எயார் பஸ் விமானங்களின் கொள்வனவை இரத்து செய்து, நான்கு A350 விமானங்களை குத்தகைக்கு வாங்க ராஜபக்ஷ அரசாங்கம் தீர்மானித்தது. இந்த தீர்மானங்கள் எடுக்க முன்னரே புதிய அரசாங்கம் பதவிக்கு வந்தது. 

“புதிய நிர்வாகம், பரிஸ், பிராங்பேட், ரோம் ஆகிய முக்கிய நகரங்களில் இருந்தான சேவைகளை நிறுத்தியது. 

“அதேசமயம், உயர் பதவிகளில் இருந்தோர் தமது சம்பளங்களையும் அதிகரித்துகொண்டனர். தமக்கான படிகளையும் அதிகரித்தனர். இது ஏற்கெனவே கஷ்டத்தில் இருந்த ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸின் நிதி நிலைமையை மேலும் மோசமாக்கியது. மேலும், தேவையில்லாத பல புதிய நியமனங்களால் நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. 

“விமான குத்தகை ஒப்பந்தத்தை 2015இல் புதிய அரசாங்கம் இரத்து செய்தாலும், முற்பணமாக செலுத்திய தொகை மீள கிடைக்காது போனமையால், ஸ்ரீ லங்கா விமான கம்பனிக்கு 154 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டம் ஏற்பட்டது. 

“பின்னர் புதிய கொள்வனவு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. இப்போது இலங்கை 95 மில்லியன் அமெரிக்க டொலர் கட்டுப்பணமாக செலுத்த வேண்டும்” என்றார். 

No comments

Powered by Blogger.