Header Ads



சர்வதேச சந்தையில், மலிவாக கிடைக்கும் "முஸ்லிம்களின் இரத்தம்"


ஒரு தெருநாய்க்குக் கல்லால் எறிந்தால் கூட அதை தட்டிக்கேட்பதற்கு சர்வதேச மட்டத்தில் நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த உலகத்தில் முஸ்லிம்களுடைய உயிர்களும் உடமைகளும் வாழ்வியல் உரிமைகளும் சின்னாபின்னப்படுத்தப்படும்போது அதை என்னவென்று கேட்பதற்குக்கூட யாரும் இல்லை.

அமெரிக்காவிலோ பிரான்ஸிலோ ஒரு இந்துவோ, பௌத்தரோ, கிறிஸ்த்தவரோ தடுக்கி விழுந்தால் கூட அது "இஸ்லாமியத் தீவிரவாதிகளின் வெறிச்செயல்" என்று ஊளையிடுவதற்கு ஊடகங்கள் காத்திருக்கின்றன. ஆனால் இங்கே ஒரு சமுதாயமே திட்டமிட்ட வகையில் கருவறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை ஏனென்று கேட்கவும் நாதியில்லை. காரணம் அது முஸ்லிம் சமுதாயம்.

இன்று சர்வதேச சந்தையில் மிகவும் மலிவாகவும் அதிகமாகவும் கிடைப்பது முஸ்லிம்களின் இரத்தமும் பொருளாதாரமும் உயிர்களும்தான் என்றால் அது மிகையில்லை.

உண்மையில் முஸ்லிம் சமுதாயத்தின் இயல்பு இவ்வாறான ஒன்றல்ல. நபி (ஸல்) அவர்களால் இந்த சமுதாயத்திற்கு உத்தரவாதப்படுத்தப்பட்ட வாழ்க்கை இதுவல்ல. மாறாக ஒரு ஏழை முஸ்லிமைக்கண்டு ரோம, பாரசீக சாம்ராஜ்ஜியங்களே அஞ்சி நடுங்கிய வரலாறுகள் இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு மட்டுமே சொந்தமானவையாகும்.

ஆனாலும் பிற்பட்ட காலங்களில் இஸ்லாம் என்ற வாழ்வியல் நெறியானது நவீன மயப்படுத்தப்பட்டு, காபிர்களோடு சமரசம் செய்யப்பட்டு, காபிர்களை நண்பர்களாகவும் உற்ற உறவுகளாகவும் ஏற்று வல்லாதிக்க வல்லூறுகளை முன்மாதிரியாகக்கொண்டு, போர்குணத்தையும் தற்காப்பையும் மறந்துபோய், வஹ்ன் என்ற வஞ்சத்தில் வீழ்ந்ததன் விளைவே இன்று இந்த சமூகத்தின் இழிநிலைக்கான ஒரே காரணியாகும்.

அழ்ழாஹ் வலியுறுத்திய, நபிகளார் செயற்படுத்திய அந்த வழிமுறையை கையிலெடுக்காத வரைக்கும் இந்த சமூகத்திற்கு இது மட்டுமல்ல, இன்னும் பல இழிவுகளும் இழப்புக்களும் தேடிவந்துகொண்டேதான் இருக்கும் என்ற நபியின் எதிர்வுகூறல் ஒருபோதும் பொய்யாகாது.

-முஹம்மது நியாஸ்-

2 comments:

  1. (1) உலகில் 50 முஸ்லிம் நாடுகள் உள்ளன என்கிறீர்கள், அனால் இந்த அநியாயத்தை தடுத்து நிறுத்த ஏன் கிருஸ்தவ நாடுகளை கெஞ்சுகிறீர்கள்?

    (2) தமிழர்களுக்கு ஜெனிவாவில் நியாயம் கிடைக்க கூடாது என மகிந்த காலத்தில் நீங்களும், முஸலிம் தலைவர்கள்ளும் படாதபாடு பட்டீர்கள்.
    இப்போது இந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க நீங்கள் ஏன் அதே முயற்சியை காட்டவில்லை?

    ReplyDelete
  2. Good message, last paragraph word அல்லாஹ் spelling wrong need to correct it.

    ReplyDelete

Powered by Blogger.