Header Ads



பிரபாகரனை வணங்கி, மன்னிப்பு கேட்டிருக்க வேண்டிய நிலை வந்திருக்கும்...

தற்போதைய அரசாங்கத்தின் பொறுப்பற்ற விதத்தை பார்க்கும் போது, மஹிந்தவும் கோத்தபாயவும் பிரபாகரனை வணங்கி மன்னிப்பு கேட்டிருக்க வேண்டிய நிலை வந்திருக்கும் என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -31- இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

முன்னாள் இராணுவத்தளபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் பிரேஸிலில் இருந்து இராணுவத் தலைமையகத்திற்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது.

இதில் இவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து தெளிவுபடுத்துமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பும் போது, இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து இதுவரை எமக்கு தெரிவிக்கப்படவில்லை, எமது நாட்டில் இவ்வாறான யுத்த மீறல்கள் இடம்பெறவில்லை, என பதில் அனுப்பப்பட்டுள்ளது.

இது சரியான பதிலா? இவ்வாறு தெரிவிப்பதா? பதவியில் இருப்பவர்கள் இவ்வாறு பதில் கூறுவதா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், தற்போது பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பித்திருந்தால், நீதிமன்றத்தில் வைத்து மஹிந்த ராஜபக்ஸவையும், கோத்தபாய ராஜபக்ஸவையும் பிரபாகரனை வணங்கி மன்னிப்பு கேட்டுமாறு கூறியிருப்பார்கள் என எனக்கு நினைக்கத் தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.