Header Ads



ஆஜரானார் ரவி, மர்மங்கள் துலங்குமா..?

மத்­திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசா­ரணை செய்ய நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் வெளி­வி­வ­கார அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க சாட்­சி­ய­ம­ளிக்­க சற்றுமுன்னர் -02- ஆஜரானார்.

130 மில்­லியன் ரூபா  செலவில் கட்­டிய வீட்டை வாட­கைக்கு கொடுக்க விரும்­பி­ய­போது பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறு­வ­னத்தின் தலைவர் அர்ஜூன் அலோ­சியஸ் தானா­கவே முன்­வந்து அதனை அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு பெற்­றுக்­கொ­டுத்தார் என ஈஸ்ட வெஸ்ட் தனியார் நிறு­வ­னத்தின் பணிப்­பாளர் வினோ­தினி விஜே­சூ­ரிய ஆணைக்­கு­ழுவில் அண்­மையில் சாட்­சி­ய­ம­ளி­த­தி­ருந்தார்.

அதன்­பின்னர் சாட்­சி­ய­ம­ளித்த க்ளோபல் லொஜிஸ்டிக் ட்ரான்­போட்­டேசன் நிறு­வ­னத்தின் சிரேஸ்ட நிதி முகா­மை­யாளர் வி. ஜே சின்­னையா குறித்த பணத்தை பிரித்­தா­னிய பிர­ஜை­யி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்­ட­தா­கவும் ஆனால் பற்­றுச்­சீட்டு எவையும் இல்லை எனவும்  தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க வசித்­த­தாக கூறப்­படும் மொனார்க் ரெசி­டன்சி மனைத்­தொ­கு­திக்கு வழங்­கப்­பட்ட வாட­கைப்­பணம், அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க அர்ஜூன் அலோ­சி­ய­சுக்­கி­டை­யி­லான தொடர்பு, மத்­திய வங்­கியில் செலுத்­திய ஆதிக்கம் போன்ற பல்­வேறு சர்ச்­சை­க­ளுக்கு பதி­ல­ளிப்­பா­ரென எதிர்ப்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

ஏற்­க­னவே இரண்டு முறை சாட்­சி­ய­ம­ளிக்க முடி­யா­தென ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கு தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்த அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­வுக்கு ஆணைக்­குழு இன்று கட்­டா­ய­மாக சாட்­சி­ய­ம­ளிக்க வர வேண்டும் என உத்­த­ர­விட்­டி­ருந்­தது. 

ஆனால், பாது­காப்பு பேர­வையில்  இடம்­பெறும் நிகழ்­வொன்றில் கலந்­தக்­கொள்ள வேண்டும் என்றும் மாலைத்­தீ­வுக்கு உத்­தி­யோ­கப்­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்ள வேண்­டி­யுள்­ள­தா­கவும் குறித்த தினங்­களில் தன்னால் ஆணைக்­கு­ழு­வுக்கு வர முடி­யாது எனவும்  ஆணைக்­கு­ழு­வுக்கு அறி­வித்தல் அளித்­தி­ருந்தார்.

ஆயினும் குறித்த விசா­ர­ணையில் மேலும் பல முக்­கிய விசா­ர­ணைகள் அடுத்த வாரத்­தி­லி­ருந்து ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­கவை உட­ன­டி­யாக ஆஜ­ராக வேண்டும் என ஆணைக்­குழு பணிப்­புரை விடுத்­தி­ருந்­தது. 

இந்நிலையிலேயே வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் இன்று  ஆஜராகியுள்ளார். 

அத்­தோடு பிணை­முறி தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவில் முக்­கி­ய­மான சாட்­சி­ய­மாக கரு­தப்­படும் பேப்­பச்­சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸின் சாட்சியப்பதிவுகள் அடுத்த வாரம் முழுவதும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. We have seen lots of councils all over the world. Even former president Tony Blaine has to face one of them for Iraque War!!!

    ReplyDelete
  2. Pent House was rented out and subsequently purchased by the company owned by Ravi's Wife and Daughter. Ravi has asked from them "Why are you wasting my time and calling me for enquiry". No Answer and Game is over.

    ReplyDelete

Powered by Blogger.