Header Ads



முஸ்லிம் தலைமைகளின், காலம் கடந்த கைசேதம்

கடந்த 14 வருங்களாக இடம் பெறும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்முறை சீர்திருத்த நகர்வுகள் மற்றும் வட்டார மீள்நிர்ணய குழுக்களின் செயற்பாடுகள் குறித்து நன்கு அறிந்திருந்தும் முஸ்லிம்களின் அரிசயல் பிரதிநிதித்துவம் குறைவதனை தடுக்கவோ அல்லது எல்லைகள் மீள்நிர்ணயம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளவோ எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத முஸ்லிம் அரசியல் கட்சிகள் இன்று கைசேதப் படுகின்றமை வியப்பிற்குரிய விடயமாகும்.

உள்ளூராட்சி தேர்தல்முறை மற்றும் எல்லைகள் மீள்நிர்ணயம் குறித்த பூர்வாங்க முயற்சிகள் 2003 ஆண்டு மேற்கொள்ளப்பட்டன, அன்று மகாஜன ஏக்சத் பெரமுனவின் தலைவராக இருந்த முன்னால் அமைச்சர் இன்றைய எதிர்க்கட்சிப் பிரதம கொரடா தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமையில் ஒரு பாராளுமன்ற தெரிவுக் குழு நியமிக்கப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டன, மேற்படி தெரிவுக்குழுவே விகிதாசார மற்றும் வட்டார கலப்புத் தேர்தல் முறையை (70/30) சிபாரிசு செய்திருந்தது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் மற்றும் உள்ளூர் அதிகார சபைகள் விசேட திருத்தச் சட்ட மூலம் ஆகிய உத்தேச சட்டமூலங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 10 முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன, நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, மாற்றுக் கொள்கைகளுக்கான அமைப்பு போன்றவற்றினால்  10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஒரு மனுவைக்கூட பாராளுமன்றத்தில் ஆளும் எதிர்க்கட்சிகளில் இருந்த முஸ்லிம் அரசியல் கட்சிகள் முன்வைக்கவும் இல்லை, ஏனைய மனுதாரர்களுக்கு ஆதரவு வழங்கவும் இல்லை.

சிறுபான்மைக் கட்சிகள் அல்லது சிறிய கட்சிகளுக்கு ஏற்படும் இழப்புக்கள்

சட்ட மூலத்தில் 5% வெட்டுப்புள்ளி அறிமுகமாகின்றது. அதாவது, போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் குறைந்தப்பட்சமாக 5% வாக்குகளை பெற்றிருந்தாலேயே கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ளப்படும்.

இதில் வட்டாரங்கள் மூலமாக 60 விகித பிரதிநிதிகளும், விகிதாசாரம் மூலமாக 40 விகித பிரதிநிதிகளும் தெரிவு செய்யப்படுவார்கள். தேர்தலின் போது வட்டாரங்களின் மூலமாக வெற்றி பெறும் வேட்பாளர்களின் வாக்குத் தொகைகைளை கழித்துவிட்டு, தெரிவு செய்யப்படாத வேட்பாளர்களின் வாக்குத் தொகைகள் சேகரிக்கப்படும். அந்த தொகைகள் வேட்பாளர்களின் கட்சிகளுக்கு வழங்கப்படும். இதன் மூலமே இந்த 40 விகித விகிதாசார தெரிவு நடைமுறையாகின்றது. இச்சந்தர்ப்பதில்தான் 5 விகித வெட்டுப்புள்ளி சிறுபான்மை கட்சிகளை பாதிக்கின்றது. ஏனெனில் ஒவ்வொரு வட்டாரத்திலும் 5% விகித வாக்குகளை பெறாத வேட்பாளர்களின் வாக்குகள் இந்த கணக்கெடுப்பில் சேர்த்துகொள்ளப்படாது.

இதனால் சிறுபான்மை கட்சிகளின் வாக்குத் தொகை கணிசமாக குறையும். ஆகவே நேரடியாக வட்டாரங்களின் மூலமாக வெற்றிப்பெற முடியாத சிறுபான்மை வேட்பாளர்கள் விகிதாசார முறையின் கீழும் தெரிவு செய்யப்பட முடியாத நிலைமை ஏற்படும். இது சிறுபான்மை கட்சிகளையும், சிறிய கட்சிகளையும், சுயேட்சைக் குழுக்களையும் வெகுவாக பாதிக்கும்.

இச்சட்ட மூலம் பெரும்பான்மை கட்சிகளுடன் கட்டாயமாக கூட்டு சேர வேண்டிய ஒரு நிர்பந்தத்தை சிறிய கட்சிகளுக்கு ஏற்படுத்துகின்றது. சிறுபான்மை கட்சிகள், பெரும்பான்மை கட்சிகளுடன் விரும்பி கூட்டு சேர்வது என்பது வேறு, பலவந்தமாக கூட்டு சேர்க்கப்படுவது என்பது வேறு.

2 comments:

  1. Our donkeys are not leaders but they are traders. Getting the votes from the community and selling to major parties for a lump sum and for ministerial positions including some diplomatic positions.

    Now we as intellectuals have to decide whether to go behìnd these donkeys or with some good human beinģs from any community.

    ReplyDelete
  2. Intellectual are only fault finders in most of the case,they aren't in practice sake of the community.

    ReplyDelete

Powered by Blogger.