August 19, 2017

"சுமனரத்னவின் மனம் மாற்றம் குறித்து, விழிப்புடன் இருக்க வேண்டுகோள்"

தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருந்த அம்பிட்டிய சுமனரத்ன தேரர் திடீரென மனம் மாறியதில் உள்ள பின்புலம் என்ன என்பது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு கிழக்கு மாகாண சபையின் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - பட்டிப்பளை பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் தெரிக்கையில்,

எமது மாவட்டத்தில் தற்போது பலரும் அம்பிட்டிய சுமனரத்ன தேரரைப் பற்றியே பேசிக் கொள்கிறார்கள். தமிழ் மக்களுக்கும், தமிழ் அரசியல் தலைமைகளுக்கும், தமிழ் அதிகாரிகளுக்கும் எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள அவர் திடீரென மனம் மாறியிருந்தால் அதன் பின் புலம் என்ன? என்பது குறித்து தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

சில மாதங்களுக்கு முன்பு பொது பல சேனா தலைவர்களை அவர் வரவழைத்த வேளை எமது இளைஞர்கள் அவருக்கு எதிராக வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினார்கள். அவ்வேளை அவர் எப்படி நடந்து கொண்டார் என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான சக்திகள் தங்களுக்கு போக இடமின்றி அலைந்து திரிந்து தற்போது அம்பிட்டிய சுமனரத்ன தேரரிடம் தஞ்சம் பெற்றுள்ளனர். அவர்களை சுமனரத்ன தேரர் பயன்படுத்த முற்படுகின்றார்.

இரு நாட்களுக்கு முன்பு எமது நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரனுக்கு எதிராக விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டக்களப்பு நகரில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். உண்மையை அறிந்து கொள்ளாதவர்களே இவ்வாறான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏதோவொரு கருத்தை வெளிப்படுத்தியோ அல்லது கோரிக்கைகளை முன்வைத்தோ ஆர்பாட்டங்களும் போராட்டங்களும் செய்வது பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஜனநாயக உரிமை அதனை மறுப்பதற்கில்லை. ஆனால் உண்மையை விளங்கிக் கொள்ளமல் அவற்றை செய்வது கண்டிக்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.

3 கருத்துரைகள்:

Hon. Pirasanna Indrakumar,

The moderate people from the both the communities knows the agenda behind it but radicals from the both the communities do fan the flame.

The period between 1985 and 1990 is an high period which made conflicts between these two communities and made unbelievable gap by the Mozaads and that was continued until recent past.

Fortunately the leaders from both communities joined together to bridge the gap and that worked to some extent.

The major community knows very well that having a bond between us is danger and now they are trying to make it unsuccessful through some element like the sa0id Buddhist monk.

Therefore we have to work little hard and think wisely in order to avoid the trap.

@Seeni, நீங்கள் சொல்லும் 1985-90 period என்பது யுத்த காலம், நடந்து 30 வருடங்களாகி விட்டது. தற்போதைய இளைய (18-40 வயது வரை) தமிழ் சமுதாயத்திற்கு சம்பந்தமில்லாத கால பகுதி. (உதாரணமாக எனக்கு அப்போது சிறு வயது, ஆரம்ப பாடசாலை மாணவன்).

எனவே, அப்போ நடந்தவைகளுக்காக இப்போ எம்மை (இப்போதய தமிழர்களை) நீங்கள் பழிவாங்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

புலிகளின் தவறுகளை, புலிகள் இருக்கும் போது அவர்களை கேட்டிருக்கவேண்டும், அல்லது உருவாக காரணமான அரசிடம் கேட்ட வேண்டும். இதற்கு சம்பந்தமில்லாத எம்மை அல்ல. Because it's not our faults.

1985-1990 க்காக நீங்கள் இப்போ எம்மை பழிவாங்க முயல்வது பிழை. You are attacking the soft-side. இது நீங்கள் ""கோழைகள்"" என காட்டுகிறது.

இதனால், எமக்கு உங்கள் மேல் வெறுப்பு/பகைமை வரலாம் தானே?

பிறகு எப்படி தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை வளரும்?

Mr Ajan Anthonyraj.

You have not fully understood the contents of my above comment. It is not your fault but it it is mine because I made my comment in a different language. If you want to really understand the contents of my comment read it again and again and try to understand so that we can have healthy discussion in the future for the betterment of both the communities.

Post a Comment