Header Ads



ரோஹின்யா முஸ்லிம்கள் பற்றி உலகம் செவிடாகவும், குருடாகவும் இருக்கக் கூடாது - எர்துகான்


மியன்மார் சிறு­பான்மை ரோஹிங்யா முஸ்­லி­ம்க­ளுக்கு எதி­ராக அந்­நாட்டு அரசின் மறை­முக ஆத­ரவில் இடம்­பெறும் திட்­ட­மிட்ட இனச்­சுத்­தி­க­ரிப்பு தொடர்பில் சர்வதேச சமூகம் செவிடாகவும் குருடாகவும் இருக்காது காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முன்­வர வேண்டும் என துருக்கி ஜனா­தி­பதி அர்­துகான் தெரி­வித்­துள்ளார்.  

உலகின்  மிகப் பெரிய 'நாடற்ற சிறு­பான்மை சமூ­க­மாக' அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் ரோஹிங்யா முஸ்­லிம்கள் மீதான மியன்மார் இரா­ணு­வத்தின் வரம்பு மீறிய அட்­டூ­ழி­யங்கள், தாக்­கு­தல்கள் கடந்த சில தினங்­க­ளாக அதி­க­ரித்­துள்­ளன.  உயிரைக் கையில் பிடித்த வண்ணம் கொத்துக் கொத்­தாக மக்கள் பங்­க­ளாதேஷ் நாட்டை நோக்கி அடைக்­கலம் கோரிப் படை­யெ­டுக்­கின்­றனர். 

“மியன்­மாரில் அரசின் மறை­முக ஆத­ரவில் நடாத்­தப்­பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேசம் குரு­டா­கவும் செவி­டா­கவும் பாசாங்கு செய்­வது வருந்­தத்­தக்­கது” என அர்­துகான் மேலும் தெரி­வித்தார்.

அடுத்த மாதம் இடம்­பெ­ற­வி­ருக்கும் ஐ.நா. சபையின் பொது ஒன்­று­கூ­டலில் மியன்­மாரில் நடாத்­தப்­பட்டு வரும் இனச்­சுத்­தி­க­ரிப்பு தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு அழுத்தம் கொடுக்­க­வி­ருப்­ப­தாக அர்­துகான் உறு­தி­ய­ளித்­துள்ளார். மியன்மார் அரசின் அத்­து­மீறல் நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக கடு­மை­யாக கண்­ட­னங்­களை பதிவு செய்­வ­தா­கவும், சர்­வ­தேச மனித உரி­மைகள் அமைப்பின் ஆத­ர­வுடன் ரோஹிங்யா முஸ்­லிம்­க­ளுக்­கான உரி­மை­களை பெற்­றுக்­கொ­டுக்க முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொள்­ள­வி­ருப்­ப­தா­கவும், இது தொடர்பில் சர்­வே­தேச நாடுகள் உத­விக்­க­ரங்­களை நீட்டும் என எதிர்­பார்ப்­ப­தா­கவும் அவர் மேலும் தெரி­வித்­துள்ளார். 

3 comments:

  1. Exectlly u right the only one leader voice for Muslim

    ReplyDelete
  2. வேடிக்கை பார்க்காமல் உங்களுடைய ராணுவத்தை களத்திற்கு அனுப்புங்கள்

    ReplyDelete
  3. ஒரு கை தட்டினால் மட்டும் சத்தம் வராது. பல கைகள் சேர்ந்து தட்டினால் அதிக சத்தம் கேட்கும்.

    ReplyDelete

Powered by Blogger.