Header Ads



அமைச்சரவையில் அர்ஜுனா - தயாசிறி மோதல், தடுத்து நிறுத்திய ஜனாதிபதி


இன்று -29- இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன், அர்ஜுன ரணதுங்க மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கிடையில் கடும் சூடான விவாதம் இடம்பெற்றுள்ளது.  

சுகததாச விளையாட்டு அரங்கினை நவீன மயப்படுத்தல் மற்றும் புனரமைப்பு பனிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், வியையாட்டு அரங்கத்தின் செயற்கைப் பாதையை மீளமைக்க மத்திய அமைச்சரவைக் கடிதத்தை அமைச்சர் அர்ஜூனா ரணதுங்க இதன்போது ஏற்றுக்கொன்டார். 

இச் சந்தர்ப்பத்திலேயே பின்வரும் உரையாடல் இடம்பெற்றிருந்தது.

தயாசிறி: அவர் எப்பொழுதும் எல்லாவிடயங்களிலும் குற்றம் சாட்டுக்களை முன்வைக்கின்றார், தலையிடுகின்றார். 

அர்ஜுன - சுகததாச தேசிய விளையாட்டு வளாகம் ஒரு செயற்கை பாதையைத் தேவை எனினும், டெண்டர் செயல்முறையில் ஒரு பிரச்சனை உள்ளது. நான் அவற்றை சுட்டிக்காட்ட வேண்டும். முடிவுகளை எடுப்பது உங்கள் பொறுப்பு. ஏதாவது தவறு இருந்தால் அதை சுட்டிக்காட்டும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.

தயாசிறி: நீங்கள் ரேஸ் புகிகாரர்களை பற்றியே பேசிகின்றனர். நீங்கள் ஓன்றாக இருந்தவேலையில் நல்லவர்கள் தற்போது கூடாதவர்கள்.

அர்ஜுனா: திரு. ஜனாதிபதி அவர்களே அமைச்சரின் கதையின் மூலமே தெரிகின்றது கிரிக்கட்டில் சூதாடக்காரர்கள் உள்ளனர் என்று. அவரே இதை ஒப்புக்கொள்கிறார் என்று.

தயாசிறி: நீங்கள் துறைமுகத்திலும் கிரிக்கட் விளையாடுகின்றீர்கள் பெற்றோலியத்திலும் விளையாடுகின்றீர்கள்.

அர்ஜுனா: நான் கிரிக்கெட் ஒவ்வொரு நாளும். விளையாடுகின்றேன்.  ஏங்கே போனாலும் விளையாடுவேன்.   கிரிக்கட் என் வாழ்க்கை. கிரிக்கட்டுக்கு பாதகம் என்றால் நான் பேசுவேன். 

தயாசிறி: அப்படி என்றால் நீங்கள் அமைச்சுப்பதவியை மற்றுங்கள். 

அர்ஜுனா: நான்  எனக்கு கொடுத்த வேலையை சரியாக செய்கின்றேன். நீங்கள் தான் உங்கள் வேலைகளை சரியாக செய்யாமல் மற்றவர்களின் வேலைகளில் தலையிடுகின்றீர்கள். இன்றுவரை நான் வாயை மூடியிருந்தேன். 

தயாசிறி: அபப்டியென்றால் நீங்களே இந்த அமைச்சசை பொறுப்பெடுங்கள். 

அர்ஜுனா: அப்படி மாற்ற வேண்டிய அவசியமில்லை. நான் இப்போது இருக்கும் அமைச்சோடு விளையாட்டுத்துறை அமைச்சைத் தந்தால் நான் ஏற்றுக்கொள்வேன். நான் இதை சொல்வதற்கு காரணம் எமது நாட்டின் விளையாட்டுத்துறையை நினைத்து. அது பற்றி பேச  எனக்கு உரிமை உண்டு. 

இந்த வாக்குவாதம் நடைபெற்றபோது ஜனாதிபதி இடையில் தலையிட்டார். மேலும் எதிர்காலத்தில் இது பற்றி நாங்கள் தனியாக விவாதிப்போம் என்று அவர் கூறினார்.

No comments

Powered by Blogger.