Header Ads



திருடர்கள் இருப்பார்களாயின் நீக்கப்படுவார்கள் - ரணில்

ஐக்கிய தேசிய கட்சி திருடர்களின் கட்சியல்ல. திருடர்கள் இருப்பார்களாயின் நீக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை நிறைவையொட்டி வரவேற்பு நிகழ்வு ஹட்டனில் இன்று (06) இடம்பெற்றது. அதன் பின்னர் ஹட்டன் டி.கே.டபிள்யு மண்டபத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஊழல் புரிவதற்கு யாருக்கும் இடமளிக்கப் போவதில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல்களை நாம் இனங்கண்டுள்ளோம்.

இன்று அமைச்சர் ஒருவரை அழைத்து நீதிபதி ஒருவர் கேள்வி கேட்கும் வகையில் காலம் மாறியிருக்கிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் அவ்வாறு நடந்ததா?

நான் இச்சந்தர்ப்பத்தில் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். எமது அரசாங்கம் திருடர்களை பாதுகாக்காது. ஏதாவது தகவல் வெளிப்படுமாயின் அந்த அறிக்கையின் அடிப்படையில் தேடிப்பார்த்து நடவடிக்கை எடுக்கப்படும். இது திருடர்களின் கட்சியல்ல. திருடர்கள் இருப்பார்களாயின் நீக்கப்படுவார்கள் என்றார்.

2 comments:

  1. அரசியலுக்கு வருவது எதற்காக..?
    வீட்டிலிருந்து பணத்தைக் கொண்டு வந்து
    மக்கள் பணி புரிவதற்காகவா..??

    இல்லவே இல்லை. பணம் ஈட்டுவதற்காகவே அரசியலில் ஈடுபடுகிறார்கள்.

    நீங்கள் இதவரை எந்த அரசியல் திருடரைப் பிடித்திருக்கிறீர்கள்..?
    பிடிக்க மாட்டீர்கள், பாதுகாக்கிறீர்கள்..!
    இதுதான் உண்மை..!!
    சும்மா பேச்சிக்கு வேண்டுமானால்
    கதைக்கலாம். செயலில் இல்லை.

    ஏனென்றால், நீங்கள் பழுத்த அரசியல்வாதியல்லவா..!
    தோல்விகளை சந்தித்தே சாதனை படைத்தவராயிற்றே..!! வாழ்த்துக்கள்..‼️

    ReplyDelete
  2. ஒரு சிலர் அரசியல்வாதிகள் இயக்கை வளங்களையும் சுயநல அரசியலுக்காக இருக்கின்றனர்

    ReplyDelete

Powered by Blogger.