Header Ads



கிழக்குக்கு தமிழ் முதலமைச்சர் வேண்டும்

கிழக்கு மாகாண சபையின் நீடிக்கப்படுகின்ற பதவிக் காலத்தில் முதலமைச்சர் பதவி தமிழர் ஒருவருக்கு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு அது நிராகரிக்கப்பட்டால் அடுத்த கட்டமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியை விட்டு விலகுவதற்கும் தயாராக இருக்க வேண்டும். இல்லையேல் அது பற்றி பேசுவதில் அர்த்தமில்லை. என மாகாண பிரதி தவிசாளரும் ரெலோ இயக்கத்தின் உப தலைவருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தில் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்ற மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

சகல மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்தும் வகையில் அரசியல் அமைப்பில் 20 ஆவது திருத்தமும் அதனை தொடர்ந்து மாகாண சபைத் தேர்தல் சட்டமும் திருத்தப்பட விருக்கின்றது. இது தொடர்பான சட்ட வரைபுகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. உத்தேச அரசியல் யாப்பு திருத்தமும் மாகாண சபைகள் தேர்தல் சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலமும் குறிப்பிட்ட காலம் வரை நீடிக்கப்படுகின்றது.

அதாவது சகல மாகாண சபைகளும் ஒரே நாளில் கலைக்கப்படக் கூடியதாக அந்த திருத்தம் அமைகின்றது. அந்த தினத்தை நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை பார்க்கும் போது அது எவ்வளவு காலம் வரை நீடிக்கும் என கூறமுடியாது. ஓரிரு மாதங்களாக கூட இருக்கலாம்.

ஆனால் நாடாளுமன்றம் தீர்மானிக்கும் திகதி இறுதியாக கூட்டப்பட்ட சபையின் 5 வருட பதவிக் காலத்திற்கு பிந்தியதாக இருக்க கூடாது என அதில் கூறப்பட்டுள்ளது. அப்படி பார்க்கும் போது 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் வரை நீடிக்க முடியும்.

காரணம் இறுதியாக ஊவா மாகாண சபை தேர்தல் 2014 செப்டம்பர் மாதம் நடைபெற்றது. சபை ஒக்டோபர் மாதம் கூட்டப்பட்ட நிலையில் அதன் 5 வருட பதவிக் காலம் 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் தான் முடிவடைகின்றது. எப்படி இருந்தாலும் அதுவரை நீடிக்கப்படுமா? அல்லது அதற்கு முன்னதாக கலைக்கப்படுமா? என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் நாடாமன்றத்திற்கு தான் உள்ளது.

இன்னும் சில வாரங்களில் கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் முடிவவடைய இருக்கின்ற நிலையில் உத்தேச திருத்தம் காரணமாக ஒரு குழப்பமான நிலையே காணமுடிகின்றது. என்னைப் பொறுத்தவரை மாகாண சபையொன்றுக்கு மக்களால் வழங்கப்படுகின்ற ஆணை 5 வருடங்களாகும். அதற்கு பின்னர் கால நீடிப்பு என்பது ஜனநாயகத்திற்கும் மக்கள் வழங்கிய ஆணைக்கும் முரணானதாகவே அமையும்.

உத்தேச அரசியல் யாப்பு 20 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் குறிப்பிட்ட காலம் வரை நீடிக்கும் வாய்ப்பு உள்ள நிலையில் குறித்த காலத்தில் தமிழ் முதலமைச்சரொருவர் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகின்றது. அதில் நியாயமும் இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து கிழக்கு மாகாண சபையில் நல்லாட்சியை முன்னெடுப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ராஜதந்திரிகளுடனான சந்திப்புகள் உட்பட பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அடிக்கடி கூறுவார்.

அந்த நல்லலாட்சிக்கு ஒரு முன் மாதிரியாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அந்த பதவியை விட்டுத் தருமா? என்ற கேள்விக்கு முதலில் நாம் விடை காண வேண்டும். நல்லாட்சியின் அடையாளமாக நீடிப்பு காலத்தில் தமிழரொருவர் முதலமைச்சராக வர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்து அது ஏற்கப்படாவிட்டால் அடுத்த கட்டம் என்ன? என்பது குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழர் முதலமைச்சராக வர வேண்டும் என மேடைகளில் பேசுவதாலும் பத்திரிகைகளில் அறிக்கை விடுவதாலும் அது கிடைத்து விடப் போவதில்லை. இந்த கோரிக்கையை முன் வைத்து அது ஏற்க மறுக்கப்பட்டால் பதவிகளை துறந்து மாகாண ஆட்சியிருந்தும் வெளியேறவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

அது மட்டுமல்ல கிழக்கு மாகாண சபையின் ஆட்சியில் பங்காளராக தமிழர் தரப்பு இருந்தாலும் தற்போதைய ஆட்சியில் தமிழ் பிரதேசங்கள் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகளிலும் ஓரிரு அமைச்சுக்களினால் திட்டமிட்டு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன.

இப்படியான சூழ்நிலையில் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க வேண்டுமா? என தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இதற்கான பதிலை காண வேண்டிய தேவையும் எமக்கு உள்ளது ரெலோ இயக்கத்தின் உப தலைவர் பிரசன்னா இந்திரகுமார் குறிப்பிட்டுள்ளார்.

7 comments:

  1. சரி கிசக்கு மாகாணசபைக்கு முதலமைச்சராக ஒரு தமிழரை நியமிப்போம், எந்த சங்கடமும் இல்லை. அதுக்கு முதல் வடக்கு முதலமைச்சராக ஒரு முஸ்லிமை நியமித்து விட்டு வாருங்கள் அடு தானே இன ஐக்கியம், நியாயம்....!

    ReplyDelete
    Replies
    1. "இன ஐக்கியமா? அது எந்த கடையில் விக்குது?

      கிழக்கில் TNA சிங்கள கட்சியுடன் சேர்ந்து அரசு அமைத்து CM யை பெறுவது தான் சிறந்தது.

      Delete
  2. இது காமடி...! முஸ்லிம்கள் சிங்களவர்களின் அடிவருடிகள், தமிழர்களுக்கு துரோகம் பண்ணிவிட்டார்கள் என்று பிரச்சாரம் செய்தது இந்த வாய்தானே...? இப்போ சிங்ககளவர்களுக்கு அடிவருடவா? அது வேற வாய் இது நாற வாயா மிஸ்டர் Ajan Antonyraj. நீங்க யாருடன் வேணுன்னாலும் கூட்டு வையுங்க, விட்டு அறுங்க இல்ல ஒட்ட அறுங்க, ஆனால் கனவு மட்டும் பலிக்காது

    ReplyDelete
  3. "அடிவருடிகள்" வேறு "சேர்ந்து ஆட்சி அமைப்பது" வேறு.

    அடிவருடிகள் என்பது பதவி-பணம் காக எதுவும் செய்ய துணிவது. அதைதானே செய்கிறீர்கள், செய்வீர்கள்.

    ReplyDelete
  4. இலங்கை நாட்டில் உள்ள பதவிகள் உட்பட சகலமும் எல்லோருக்கும் உரிமையானது. முஸ்லிம்கள் அதனை ஜனநாயக முறையில் தான் இன்று வரை போராடி பெற்று வருகிறார்கள். எந்த விதமான தரங்கெட்ட முறையிலும் ஆயுதம் ஏந்தி பலாத்காரமாக நாட்டை கொள்ளையடிக்கவோ, அல்லது வெளிநாட்டுக்கரனுக்கு காட்டியும் கூட்டியும் கொடுத்து பிச்சை எடுக்கவில்லை. Ajan antonyraj உனக்கும் இந்த பிரச்சனைகளுக்கும் என்ன சம்பந்தம், இது சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனை. எதுக்கு நீ சம்பந்தமில்லாமல் குறுக்க நெடுக்க இங்கன நடக்குறே....?

    ReplyDelete
    Replies
    1. பதவி-பணத்திற்காக எதைக்கூட செய்ய துணிந்தவர்கள் "ஜனநாயக முறையில் போராடுகிறார்களா?. நீங்கள் நல்ல காமெடி தான்.

      Delete
  5. Vadakitku thamilar muthalamaicharahi kilithathu enna???oru afiviruthiyum nadaka vidamatarhal ....athukulla kilakum venduma??

    ReplyDelete

Powered by Blogger.