Header Ads



பஹ்ரெய்னிலுள்ள இலங்கைப் பெண், பற்றி தகவல் கோரல்


பஹ்­ரெய்ன் வைத்­தி­ய­சா­லை­யொன்றில் அனு­ம­திக்கப்­பட்­டுள்ள நிலையில் சிகிச்சை பெற்­று ­வரும் இலங்கைப் பெண்­ணொ­ருவர் தொடர்பில்  வெளி­நாட்டு வேலை­வாய்ப்புப் பணி­யகம் தகவல் கோரி­யுள்­ளது.

பஹ்ரெய்னிலுள்ள சல்மானியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இப்பெண் தொடர்பில் பஹ்ரேனின் இலங்கை தூதரகத்தினூடாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்பெண் ஞாபகமறதி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் இலங்கை, கனேமுல்ல பிரதேசத்தை சேர்ந்த இனோகா தமயந்தி என்ற பெண்ணொருவரென பஹ்ரெய்னிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. 

அவரிடம் கடவுச்சீட்டோ, ஆள் அடையாளத்தை உறுத்திப்படுத்தும் வகையிலான எவ்வித ஆவணங்களோ இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையிலுள்ள தனது வதிவிடம் தொடர்பான எவ்விடயம் அவருக்கு ஞாபகத்தில் இல்லையெனவும் தூதரகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவர் தொடர்பில் மேலும் தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு அவசியமெனவவும் அதற்காக பொதுமக்களின் உதவியை எதிர்ப்பார்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இப்பெண் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துக்கு வருகை தந்தோ 011 2864100 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டோ தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

(ரெ.கிறிஷ்­ணகாந்)

No comments

Powered by Blogger.