Header Ads



சிங்கள, தமிழ் முஸ்லிம்களுக்கு சிறந்த பாடத்தை புகட்டிய நீதிபதி

புத்தன்கல ஆனந்த தேரர் நீதிபதி மா. இளஞ்செழியனை சந்தித்து பாராட்டினார்

அம்பாறை புத்தன்கல ஆனந்த தேரர் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை சந்தித்து, நீதிபதியின் செயற்பாடுகளைப் பாராட்டியுள்ளார்.

யாழ். மேல் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நீதிபதியை சந்தித்த அம்பாறை புத்தன்கல ஆனந்த தேரர், அண்மையில் மெய்ப்பாதுகாவலர் கொலை செய்யப்பட்ட போது நீதிபதி செயற்பட்ட விதத்தைப் பாராட்டியுள்ளார்.

ஆனந்த தேரர் 2005 ஆம் ஆண்டு வரை இராணுவத்தில் பணியாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் யாழ். படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியும் கலந்து கொண்டிருந்தார்.

இதேவேளை, புத்தன்கல ஆனந்த தேரர் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

ஒரு சிங்கள விதவையின் காலில் வீழ்ந்து மண்டியிட்டமை மூலம் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சிறந்த பாடத்தை நீதிபதி புகட்டியுள்ளதாக தேரர் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், தேரர் நீதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கண்ணீருக்கு இனம் இல்லை
உணர்வுகளுக்கு இனம் இல்லை
நாம் சுவாசிக்கும் காற்றுக்கும் இனம் இல்லை
பருகும் நீருக்கும் இனம் இல்லை.
சூரியக் கதிர்களுக்கும் இனம் இல்லை.

என தெரிவித்து, அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டியதன் அவசியத்தை தேரர் வலியுறுத்தியுள்ளார்.

1 comment:

Powered by Blogger.