Header Ads



நல்லாட்சிக்கு பேரிடி, வீழ்ந்தது பங்குச்சந்தை

பிணை­முறி விவ­காரம் தொடர்பில் இடம்­பெற்­று­வரும் விசா­ர­ணை­களால் பங்­குச்­சந்­தையில் பங்­கு­களின் பெறு­மதி  கடந்த ஏழு நாட்­க­ளாக  வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தா­கவும், இதுவே இந்த வரு­டத்தின் இரண்­டா­வது மிகப் பெரிய வீழ்ச்சி எனவும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  தற்­போது பிணை முறி விவ­கா­ரங்கள் தொடர்­பாக  முன்னாள் நிதி­ய­மைச்சர் மற்றும்  மத்­திய வங்கி அதி­கா­ரி­க­ளிடம்  விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­வதால்  அர­சியல் ஸ்திரத்­தன்மை இல்­லாது போய்­விடும் என்ற  கார­ணத்­தினால் உள்ளூர் முத­லீட்­டா­ளர்­களின் முத­லீ­டுகள் வெகு­வாக வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

 இலங்கை அர­சியல்  ஸ்திரத்­தன்மை ஆட்­டங்­காணும் என்ற எதிர்­வு­கூ­றலில் முத­லீட்டு நட­வ­டிக்­கைகள் பல ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளன. மேலும்,  பங்­கு­தா­ரர்கள் 56.47 பில்­லியன் ரூபா நட்­டத்தை சந்­தித்­துள்­ளனர். பங்­குச்­சந்தை சுட்­டெண்­க­ளான ASPI  ஆனது 1.91 சத­வீ­தத்­தாலும்  S&P SL  20 ஆனது  1.40 சத­வீ­தத்­தாலும்  வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது. 

இது குறித்து சிரேஷ்ட பொரு­ளி­ய­லாளர் லலித்­சிறி குண­ருவான் கருத்துத் தெரி­விக்கும் போது,   இலங்­கையின் நிதி நிலை­மையை  காட்டும் குறி­யீ­டாக பங்­குச்­சந்­தையின் வீழ்ச்சி எழுச்சி காணப்­ப­டாத போதிலும் இந்­நி­லை­மை­யா­னது  இலங்­கையின் நிதி­மு­கா­மைத்­து­வ­மா­னது படு­மோ­ச­ம­டைந்­துள்­ள­மை­யினை சுட்­டிக்­காட்­டு­கின்­றது. அத்­துடன்,  இந்த அர­சாங்கம் வெளி­நாட்டு நாண­யங்­களை ஒழுங்­காக முகாமை செய்­வ­திலும் தவறு விடு­கின்­றது. 

மேற்­கு­றிப்­பிட்ட கார­ணங்­க­ளினால்  வெளி­நாட்டு நாணய நிதி­யத்தின் தாக்­கத்தால் இலங்­கையின் கொள்கை வட்­டி­வீ­தத்தில் தளம்பல் ஏற்­படும் என்ற அச்சம் இலங்கை மத்­திய  வங்­கிக்கு காணப்­பட்­டது. அத்­துடன், பங்­குச்­சந்­தையும்  பங்­குச்­சந்­தையின் அலுவலக நாட்களான,   போயா, விடுமுறை தினங்கள் தவிர்ந்த நாட்களான கடந்த  ஜூலை 17 ஆம் திகதி தொடக்கம் ஜூலை  24 ஆம் திகதி வரையான ஏழு நாட்களில்  வீழ்ச்சியடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.