Header Ads



பரீட்சை மண்­ட­பத்தில், முகத்தை மறைக்க (Face Cover) தடை

க.பொ.த உயர் தரப் பரீட்சை நாளை ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இப்­ப­ரீட்­சைக்கு தோற்றும் முஸ்லிம் மாண­விகள் தங்­களின் தேசிய அடை­யாள அட்­டையில் உள்­ள­வாறு முகத்தை வெளிப்­ப­டுத்தும் வகையில் பரீட்சை மண்­ட­பத்தில் நடந்து கொள்ள வேண்­டு­மென்று கிழக்கு மாகாண கல்விப் பணிப்­பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தெரி­வித்தார். 

க.பொ.த உயர்தரப் பரீட்சை தொடர்பில் மாகாண கல்விப் பணிப்­பா­ளர்­க­ளுக்கு பரீட்சைத் திணைக்­க­ளத்­தினால் கொழும்பில் நடத்­தப்­பட்ட அறி­வு­றுத்தல் கூட்­டத்தில் மேற்­படி முடிவு செய்­யப்­பட்­ட­தாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்­பாளர் நிஸாம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்­கையில்,

க.பொ.த. உயர்தரப் பரீட்­சைக்கு தோற்றும் முஸ்லிம் மாண­விகள் தங்­களின் கலா­சா­ரத்தை வெளிப்­ப­டுத்தும் ஆடை­களை அணிந்து கொள்­வதில் எந்த தடை­யு­மில்லை. ஆயினும், அவர்கள் பரீட்சை மண்­ட­பத்தில் தங்­களின் ஆள் அடை­யா­ளத்தை உறு­திப்­ப­டுத்தும் வகையில் தங்­களின் முகங்­களை மறைத்து (Face Cover) திரை­யி­டு­வது தடுக்­கப்­பட்­டுள்­ளது. 

காரணம் பரீட்சை எழு­து­கின்­ற­வரின் ஆள் அடை­யாளம் என்­பது முகத்தை கொண்டே தீர்­மா­னிக்­கப்­ப­டு­கின்­றது. பரீட்­சார்த்­திகள் தங்­களின் தேசிய அடை­யாள அட்­டையில் உள்­ள­வாறு முகத்தை வெளிப்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும். இதற்கு மாறாக முகத்தை முழுமையாக மறைத்து பரீட்சை எழுதுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.