Header Ads



திருகோணமலை முஸ்லிம்களின் காணி, பிரச்சினைகளை தீர்ப்பது யார்..?


முஸ்­லிம்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் முஸ்­லிம்­களின் காணிகள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருக்­கின்­றன. முஸ்­லிம்­களின் காணிப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு முஸ்லிம் அர­சி­யல் ­வா­திகள், புத்­தி­ஜீ­விகள், முஸ்லிம் அமைப்­புகள், துறைசார் நிபு­ணர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்பட வேண்டும் என அப்பகுதி சிவில் அமைப்புகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றன.

திரு­கோ­ண­மலை மாவட்­டத்தில் முஸ்­லிம்­க­ளுக்­கான காணி உறு­திகள் உரி­ய­கா­லத்தில், உரிய முறையில் வழங்­கப்­ப­ட­வில்லை. நாட்டில் இடம்­பெற்ற யுத்தம் கார­ண­மாக உரித்­தா­வ­ணங்கள் உரிய காலத்தில் வழங்­கப்­ப­ட­வில்லை.  அதேபோன்று தொல்­பொருள் திணைக்­க­ளத்­தினால் காணிகள் திடீ­ரென எல்­லைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. மக்கள் வாழும் குடி­யி­ருப்புப் பகு­திகள் இவ்­வாறு எல்­லை­யி­டப்­பட்டு அறி­வித்தல் பல­கைகள் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­டு­வதால் மக்கள் பீதிக்­குள்­ளா­கி­யுள்­ளனர். வன­ஜீ­வ­ரா­சிகள் திணைக்­க­ளத்­தி­னாலும் காணிகள் திடீர் திடீரென எல்­லை­யி­டப்­ப­டு­கின்­றன. இதனால் தமது காணிகள் எப்போது பறிபோகுமோ எனும் அச்சத்தில் மக்கள் காலத்தைக் கடத்துகின்றனர்.

முஸ்லிம்களின் பல நூறு ஏக்கர் காணிகள் இராணுவ தேவைகளுக்காக அபகரிக்கப்பட் டுள்ளமையும் இங்கு குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டியதாகும். முஸ்லிம்களின் காணிகளில் இராணுவ முகாம்கள், கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்னன. திருகோணமலை மாவட்டத்தில் இவ்வாறு 27 முஸ்லிம் தனியார் காணிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

முஸ்லிம்களுக்குச் சொந்தமான இந்தக் காணிகளை விடுவிக்கும் விடயத்தில் இராணுவத்தினரும் அரசாங்கமும் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதுவிடயத்தில் அசமந்தமாகவே செயற்படுகின்றனர்.
இதற்கப்பால் திட்டமிட்ட சிங்களமயமாக்கலும் அங்கு தொடர்ந்து வருகிறது. தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமான காணிகளில் புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு அவற்றை ஆக்கிரமிக்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள் முன்கொண்டு செல்லப்படுகின்றன.  
இவ்வாறு திருமலை மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தொடர் கதையாகிக் கொண்டே செல்கிறது. இவற்றை பிரதேச, மாவட்ட, மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டங்களும் நம் கைகளில் இல்லை என்பது துரதிஷ்டவசமானதாகும்.  இது தொடர்பில் முறையான கொள்கைகள் வகுக்கப்பட்டு வினைத்திறனான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் அதை யார் முன்னின்று செய்யப் போகிறார்கள் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.

(விடிவெள்ளி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்

1 comment:

  1. ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி திருக்கோணமலை மாவட்டத்தில் 93, 441 குடும்பங்களைச் சேர்ந்த 384, 153 மக்களைக்கொண்டுள்ளது இந்த நகரம்.தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள்ஆகிய மூன்று இன மக்களும் இந்த நகரத்தில் வாழ்கின்றபோதிலும் நகரத்தில் தமிழர்களே பெரும்பான்மையாக வாழ்கின்றனர்

    ReplyDelete

Powered by Blogger.