Header Ads



ரோஹின்யா முஸ்லிம்களை, கல்கிசையில் தங்கவைக்க ஏற்பாடு..?

-BBC-

இலங்கையில் சட்ட விரோத குடியேற்றகாரர் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரொஹிஞ்சா முஸ்லிம்களை வேறொரு இடத்தில் தங்க வைத்து பராமரிக்க ஐ.நா.அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் முன் வந்துள்ளது.

இவர்களுக்கு பிறிதொரு நாட்டில் புகலிடம் பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் அந்த அமைப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மீரிகான சட்ட விரோத குடியேற்றகாரர் தடுப்பு முகாமில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளிட்ட 30 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் 3 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்புக்கு வெளியே கல்கிசை பகுதியில் இவர்களை தங்க வைத்து பராமரிப்பது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கும் ஐ.நா. அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலய பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பொன்றும் இடம் பெற்றுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கா இதற்கு இணக்கம் தெரிவித்திருந்தாலும் அதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட வேண்டும் என இந்த விவகாரத்தில் குடிவரவு, குடியகல்வு தினைக்கள அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோத குடியேற்றகாரர் தடுப்பு முகாமில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளிட்ட 30 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சட்ட விரோத குடியேற்றகாரர் தடுப்பு முகாமில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளிட்ட 30 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மல்லாகம் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ள கட்டளையின் படி மீண்டும் இவர்கள் எதிர்வரும் 17ம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருக்கின்றனர்.

அதற்கு முன்னதாக நீதிமன்ற அனுமதி கோரும் மனுவொன்றை தாக்கல் செய்யவிருப்பதாக உள்நாட்டு மனித உரிமைகள் அமைப்பான ஆர்.ஆர். ரி அமைப்பை சேர்ந்த மூத்த சட்டத்தரணி சிராஸ் நூர்டின் கூறுகின்றார்.

சுமார் 5 வருடங்களாக இந்தியாவில் ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பராமரிப்பில் புதுடெல்லியிலும் தமிழ்நாடு அதிராம்பட்டினத்திலும் இவர்கள் தங்கியிருந்துள்ளனர்.

தமிழ் நாட்டிலிருந்து கடந்த ஏப்ரல் மாதம் படகு மூலம் வேறொரு நாட்டிற்கு சென்று கொண்டிருந்த வேளை ஏப்ரல் 30ம் தேதி இலங்கை கடல் எல்லைக்குள் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.