Header Ads



மைத்திரியுடன் இணைவாரா விஜயதாஸசா..?

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவை ஐக்கிய தேசியக் கட்சி தனது கட்சியிலிருந்து விலக்கினால் அவர் மஹிந்தவுடன் போய் இணையாமல் மைத்திரியுடன் வந்து இணைய வேண்டும். இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் டிலான் பெரேரா.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கியமைக்கு நீதி அமைச்சர் விஜயதாஸ எதிப்புத் தெரிவித்துள்ளதால் அவருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த விடயத்தில் விஜயதாசவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள மஹிந்த அணியினர் அவரை அந்த அணியில் வந்து இணையுமாறு அழைப்பும் விடுத்துள்ளனர். 

அந்த அணியில் எந்த ராஜபக்ச வேண்டுமானாலும் இணையலாம். ஆனால், விஜயதாஸ ராஜபக்சவால் இணைய முடியாது.  இணைந்தால் அவரது அரசியல் வாழ்க்கை அவ்வளவு தான். மஹிந்த அணியினர் இனவாதிகள், மதவாதிகள். 

அவர்களுடன் போய் இவர் இணைந்தால் என்ன நடக்கும் என்று நினைத்துப் பாருங்கள். மஹிந்தவுடன் இருந்து தான் விஜயதாஸ ஐக்கிய தேசியக் கட்சியிடம் சென்றார். 

அந்த அணி எப்படிப்பட்டது என்பதை விஜயதாஸ நன்கு அறிவார். அறிந்து கொண்டும் அவர்களிடம் போவது முட்டாள்தனம்.

கடந்த காலங்களில் விஜயதாஸவை அதிகம் விமர்சனம் செய்தவர்கள் அவர்கள். ஊழலுக்கு எதிராக துணிச்சலுடன் குரல் கொடுக்கும் விஜயதாஸ அப்படிப்பட்டவர்களிடம் செல்லக்கூடாது.

ஐக்கிய தேசியக் கட்சி விஜயதாஸ ராஜபக்சவை கட்சியிலிருந்து விலக்கினால் மஹிந்தவுடன் போய் இணையாமல் மைத்திரியுடன் வந்து இணையுமாறு நான் அவருக்கு அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.

No comments

Powered by Blogger.