Header Ads



இஸ்ரேல், ஜோர்தான் எம்.பி மோதல் - நெதன்யாகுவின் தலையீட்டினால் தவிர்ப்பு

ஜோர்தான் மற்றும் இஸ்ரேல் எம்.பிக்கள் இருவருக்கும் இடையில் இடம்பெறவிருந்த கைகலப்பு ஒன்று இஸ்ரேல் பிரதமர் பெயன்ஜமின் நெதன்யாகுவின் தலையீட்டை அடுத்து தடுக்கப்பட்டுள்ளது.

சமூகதளத்தில் ஒருவருக்கு ஒருவர் திட்டிக்கொண்ட இரு எம்.பிக்களும் இஸ்ரேல், ஜோர்தான் எல்லையில் சந்திக்க திட்டமிட்டனர். இதன்போது கைகலப்பொன்று இடம்பெறுவது பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் நெதன்யாகு கடைசி நேரத்தில் தலையிட்டு ஒரேன் ஹஸன் எம்.பியை அந்த சந்திப்பில் பங்கேற்க வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜூலை இறுதியில் ஜோர்தானில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இரு நாட்டு உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் இஸ்ரேல் காவலர் ஒருவர் இரு ஜோர்தானியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி இருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பிலேயே ஒரேன் ஹஸன் மற்றும் ஜோர்தான் எம்.பி யஹ்யா அல் சவூத் ஒருவருக்கு ஒருவர் திட்டிக்கொண்டுள்ளனர். இதன்போது ஒரு ஆணாக இருந்தால் தம்மை சந்திக்கும்படி யஹ்யா சவால் விடுத்ததை அடுத்தே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 

No comments

Powered by Blogger.