Header Ads



புத்தளத்தில் குப்பை கொட்ட வேண்டாம்

கொழும்பில் சேக­ரிக்­கப்படும் குப்­பை­களை புத்­தளம் அறு­வைக்­காடு பிர­தே­சத்தில் கொட்­டு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது. எனினும் அங்கு குப்பை கொட்­டு­வ­தற்கு மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் நட­வ­டிக்­கை­களை கைவிடு­மாறு அர­சாங்­கத்­திடம்  தாம் வேண்­டுகோள் விடுப்­ப­தாக முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.அஸ்வர் தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பொர­ளை­யி­லுள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

நாட்டில் தற்­போது குப்பை பிரச்­சினை நில­வு­கி­றது. குறித்த பிர­தே­சத்தில் குப்­பை­ கொட்­டும்­போது அப்­பி­ர­தேச மக்கள் எதிர்ப்­பினைத் தெரி­விக்­கின்­றனர். எனவே எதிர்ப்பு கிளம்­பும்­போது வேறொரு இடத்தில் குப்பை கொட்­டு­கின்­றனர். எனவே இவ்­வாறு இட­மாற்­று­வதன்  மூலம் மாத்­திரம் குப்பைப் பிரச்­சினை தீர்ந்­து­வி­டப்­போ­வ­தில்லை. எனவே மக்­க­ளுக்குப் பாத­க­மில்­லாத வகையில் குப்பை முகா­மைத்­துவ நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும்.

கொழும்பில் சேக­ரிக்­கப்­படும் குப்­பை­களைக் கொட்­டு­வ­தற்கு அரசாங்கம் எதிர்­பார்த்­துள்ள புத்­தளம் அறு­வைக்­காடு பிர­தே­ச­மா­னது, அப்­பி­ர­தேச மக்­களின் வாழ்­வா­தா­ரத்தில் முக்­கிய வகி­பா­க­முள்ள பகு­தி­யாகும். அப்­பி­ர­தே­சத்தை பொன்­ப­ரிப்­பு­பற்று” என மக்கள் அழைக்கின்றனர். எனவே அந்த பொன்பரிப்பு மண்ணை குப்பை பரப்பும் மண்ணாக மாற்றக்கூடாது என அரசாங்கத்திடம் வேண்டிக்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.